3 பணிக்கு 4 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்!என்னென்ன பணி?

கொரோனா சிகிச்சைகளை கண்காணிக்க 4 ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் குழு அமைத்துள்ளது தமிழக அரசு!
 
3 பணிக்கு 4 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்!என்னென்ன பணி?

தற்போது தமிழகமெங்கும் கொரோனா என்னும் கடலில் தத்தளித்து வருகிறது. மேலும் தமிழக மக்கள் கவலையில் மிதக்கின்றனர். இதற்காக தமிழகத்தில் தமிழகத்தின் சார்பில் பல்வேறு கட்டுப்பாட்டு விதிகள் தளர்வு முறைகள் மேலும் தடைகளும் விதிக்கப்பட்டுள்ளன. அவைகளில் முக கவசம் அணிவது கட்டாயம் திருமண நிகழ்ச்சிகளுக்கு 50 பேர் மட்டுமே அனுமதி போன்றவைகள் குறிப்பிடத்தக்கது. மேலும் இவை மட்டுமின்றி தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கும் நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.corona

இத்தகைய முன்னேற்பாடுகளும் கட்டுப்பாடுகளும் தமிழகத்தில் இருந்தாலும் தமிழகத்தில் என்னவோ கொரோனாவின் ஆதிக்கம் அதிகமாகவே காணப்படுகிறது. மேலும் இன்றைய தினம் கொரோனா  நோயானது 16 ஆயிரத்து தாண்டி தமிழக மக்களை வேதனைப் படுத்துகிறது. மேலும் ஆதிக்கம் மட்டுமின்றி உயிரிழப்பும் அதிகமாக காணப்படுகிறது, அதன்படி இன்றைய தினம் தமிழகத்தில் கொரோனா  உயிரிழப்பு நூறை நெருங்கியுள்ளது. இந்நிலையில் தற்போது தமிழக அரசானது சில அதிரடி குழு ஒன்றை உருவாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இக்குழுவானது 4 ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு எனவும் குறிப்பிடத்தக்கது. மேலும் கொரோனா  சிகிச்சைகளை கண்காணிக்க 4 ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளது. தமிழக அரசு நோயாளிகளுக்கு போதிய அளவு ஆக்சிசன் உள்ளதா? என்பதை கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் சிகிச்சைக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் இருப்பை கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரி கவுரவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் மருத்துவமனைகளில் படுக்கை இருப்பினை கண்காணிக்க அதிகாரிகள் ஐஸ்வர்யா மற்றும் கட்டா ரவி தேஜா இருவரும் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் 4 ஐஏஎஸ் அதிகாரிகளும் தமிழகத்தில் வரும் நாட்களில் தங்களது பணியினை சிறப்பாக மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web