இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு:"நவம்பரில் 4 நாட்கள் வாக்காளர் சேர்ப்பு முகாம்!"

நவம்பர் 13,14,27 மற்றும் 28 ஆம் தேதியில் வாக்காளர் சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது
 
voter list

தற்போது நம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. மேலும் தமிழகத்தில் பலரும் வாக்களிக்கச் சென்றனர். மேலும் இந்த முறையை ஆண்களை விட அதிகமே பெண்கள் வாக்களித்ததாக கூறப்படுகிறது. இதன் மத்தியில் ஒரு சிலர் பல்வேறு காரணங்களால் வாக்களிக்க தவறி விட்டனர் என்றே கூறலாம். இந்நிலையில் தற்போது தமிழ்நாடு கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். மேலும் இவை கல்லூரி மாணவர்களுக்கும் மிகவும் பிரயோஜனமாக இருக்கும் என்றே காணப்படுகிறது.saagu

அதன்படி நம் தமிழகத்தில் நவம்பர் மாதத்தில் நான்கு நாட்கள் வாக்காளர் சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. அதன்படி நவம்பர் 13, 14, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. மேலும் வரும் ஜனவரி 1-ஆம் தேதி 18 வயது நிறைவடைந்து அவர்கள் தங்களை வாக்காளர்களாக பதிவு செய்துகொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.

மேலும் வாக்காளர்கள் பெயர் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்டவை தொடர்பான விண்ணப்பங்களையும் சிறப்பு முகாமில் அளிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி வாக்காளர் சேர்ப்பு முகாம் நடைபெறும் என்று தமிழ்நாடு கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி இத்தகைய அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

From around the web