சென்னை திருவொற்றியூர் பகுதி தாசில்தாருக்கு கொலை மிரட்டல் 4 பேர் மீது வழக்கு!

தாசில்தாருக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது!
 
சென்னை திருவொற்றியூர் பகுதி தாசில்தாருக்கு கொலை மிரட்டல் 4 பேர் மீது வழக்கு!

தமிழக அரசின் சின்னத்தில் வாய்மையே வெல்லும் என்ற வாசகம் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த படி கடந்த காலங்களில் வாய்மையே வெல்லும் கொண்டிருந்த ஆனால் காலங்கள் மாற மாற ஒரு சில பகுதிகளில் ஊழல்கள்  மேலும் சில தினங்கள் முன்பு உயர்நீதிமன்ற நீதிபதிகள் தமிழகத்தில் இலவச சேவைகளை பெறுவதற்கும் லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது என்றும் வருத்தத்தில் கூறினார். பல பகுதிகளில் எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்ற சூழ்நிலை நிலவுகிறது.மேலும் மக்கள் சிறிய சான்றிதழ் வாங்குவதற்கு கூட லஞ்சம் கொடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது மிகவும் வேதனை அளிக்கிறது.

tamilnadu

அது மத்தியிலும் ஒரு சில நல்ல அதிகாரிகளும் தமிழகத்தில் உள்ளது தமிழகத்தின் வாய்மையை குறிக்கிறது. மேலும் அவர்களின் நேர்மையான பணியும் தமிழகத்தில் திறம்பட செயல்களும் அவ்வப்போது வெளிச்சத்திற்கு வருகின்றன. ஆனால் அவர்களையும் ஒரு சிலர் அச்சுறுத்துவது தமிழகத்தில் சோகத்தையும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி சென்னை திருவொற்றியூர் பகுதியில் தாசில்தாராக ராஜா போஸ் உள்ளார்.

அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 4 பேர் மீது தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன்படி அவர் அரசு நிலத்தில் அத்துமீறி நுழைந்து ஆள்துளை கிணறு தோண்ட முயன்றவர்களை வெளியேறும்படி அறிவித்தார்.இதனால் அவருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது என தொடர்ந்து ராஜா போஸை கொலை மிரட்டல் விடுத்த நவ்ஷத் கான் ,முகமது யூசப் ,முகமது சபியுல்லா, பாபு  ஆகியோர் மீது தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இது போன்ற சம்பவம் வேதனையளிக்கிறது.

From around the web