சென்னைக்கு வர துடிக்கும் வெளி மாவட்டத்தினர்: இபாஸ் கிடைக்காததால் அதிருப்தி

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாக இருந்தது. தமிழக மொத்த பாதிப்பில் சுமார் 70 முதல் 75 சதவீதம் பேர் சென்னையில் தான் இருந்தனர் என்பதால் சென்னையை விட்டு வெளியேற பிற மாவட்டத்தில் முடிவு செய்தனர் குடும்பம் குடும்பமாக வீட்டை காலி செய்துவிட்டு சென்னையை விட்டு லட்சக்கணக்கானோர் வெளியேறினார்கள். ஆனால் கடந்த சில நாட்களாக சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. அது மட்டுமன்றி சென்னை தவிர
 

சென்னைக்கு வர துடிக்கும் வெளி மாவட்டத்தினர்: இபாஸ் கிடைக்காததால் அதிருப்தி

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாக இருந்தது. தமிழக மொத்த பாதிப்பில் சுமார் 70 முதல் 75 சதவீதம் பேர் சென்னையில் தான் இருந்தனர் என்பதால் சென்னையை விட்டு வெளியேற பிற மாவட்டத்தில் முடிவு செய்தனர்

குடும்பம் குடும்பமாக வீட்டை காலி செய்துவிட்டு சென்னையை விட்டு லட்சக்கணக்கானோர் வெளியேறினார்கள். ஆனால் கடந்த சில நாட்களாக சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. அது மட்டுமன்றி சென்னை தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் கொரனோ வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சென்னையை விட்டு பிற மாவட்டத்திற்கு சென்றவர்கள் தற்போது மீண்டும் சென்னைக்கு வர இ-பாஸ்க்கு விண்ணப்பித்து உள்ளனர். தற்போது வரை 4.92 லட்சம் பேர் சென்னைக்கு வருவதற்காக விண்ணப்பித்து உள்ளதாகவும் இதில் 1.66 லட்சம் பேர்களுக்கு இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும், 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு இபாஸ் தள்ளுபடி செய்யப் பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்

தமிழகத்தின் பிற மாவட்டங்களில் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவது மட்டுமின்றி சென்னை போன்று அங்கு வேலை வாய்ப்பும் வருமானமும் இல்லை என்பதால் மீண்டும் சென்னைக்கு வர பிறமாவட்டத்தினர் துடிக்கின்றனர் என்பதும் ஆனால் இபாஸ் கிடைக்காததால் அவர்கள் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது

From around the web