தொடங்கியது 3வது அலை: உலக சுகாதார அமைப்பு தகவல்

 
third wave

மூன்றாவது அலை தொடங்கி விட்டதாக உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

இந்தியா உள்பட உலகின் அனைத்து நாடுகளிலும் தற்போது தான் இரண்டாவது அலை தாக்கம் குறைந்து வருகிறது. இருப்பினும் இரண்டாவது அலை முழுவதுமாக முடிவுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் ஒருசில நாடுகளில் மூன்றாவது அலை தொடங்கி விட்டதாகவும் டெல்டா வைரஸ் பாதிப்பு தான் மூன்றாவது அலை என்றும் இந்த வைரஸ் பாதிப்பு மிக அதிகமாக இருக்கும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

மூன்றாவது அலை பாதிப்பில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக் கொள்ள வேண்டுமானால் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பு ஊசி போட்டுக் கொண்டால் கூட போதுமானது என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது 
உலகில் உள்ள அனைத்து நாடுகளும் பொதுமக்களை 3வது அலையில் இருந்து காப்பாற்றிக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே இந்தியாவில் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் மூன்றாவது அறை ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web