செப்டம்பரில் 3வது அலை: 2வது அலையே இன்னும் ஓயலையே!

 
third wave

இந்தியாவில் செப்டம்பர் மாதம் கொரோனா மூன்றாவது அலை பரவ வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவது தெரிந்ததே. இந்த நிலையில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தற்போது இந்தியாவில் மிக வேகமாக பரவி வருகிறது என்றாலும் கடந்த சில நாட்களாக மட்டும் குறைந்துகொண்டே வருகிறது. கடந்த மே மாதம் தினமும் நான்கு லட்சத்திற்கும் அதிகமான பாதிப்பு இருந்த நிலையில் தற்போது அது ஒன்றரை லட்சமாக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இரண்டாவது அலை ஓய்ந்தாலும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் மூன்றாவது அலை இந்தியாவில் பரவ வாய்ப்பு இருப்பதாகவும் அதற்கு முன்னர் இந்தியர்கள் அனைவருக்கும் தடுப்பு ஊசி செலுத்தி மக்களை பாதுகாப்புடன் வைத்திருக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் நிதி ஆயோக் உறுப்பினர் விகே சரஸ்வத் என்பவர் தெரிவித்துள்ளார். செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் இந்தியாவில் மூன்றாவது அலை பரவும் என்ற தகவல் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web