முதல்முறையாக 4000ஐ நெருங்கிய கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் பரபரப்பு

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த எண்ணிக்கையை சுகாதாரத்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ள நிலையில் இதுவரை இல்லாத வகையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 3940 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 82,275 ஆக உயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 4000ஐ நெருங்கியுள்ளது என்பதும் 3900க்கும் அதிகமானோர் பாதிக்கப்படுவது இதுவே முதல்முறை என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் சென்னையில்
 

முதல்முறையாக 4000ஐ நெருங்கிய கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் பரபரப்பு

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த எண்ணிக்கையை சுகாதாரத்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ள நிலையில் இதுவரை இல்லாத வகையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 3940 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 82,275 ஆக உயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 4000ஐ நெருங்கியுள்ளது என்பதும் 3900க்கும் அதிகமானோர் பாதிக்கப்படுவது இதுவே முதல்முறை என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் சென்னையில் இன்று மட்டும் 1939 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 53762 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் முதல்முறையாக கொரோனா பாதிப்பு 53ஆயிரத்தை தாண்டியுள்ளது.

மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 54 பேர் பலியாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் மொத்தம் 1079 பேர் பலியாகியுள்ளனர். மேலும் தமிழகத்தில் இன்று 1,443 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 45,537 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் இன்று தமிழகத்தில் 32,948 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் தமிழகத்தில் மொத்தம் 11,10,402 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

முதல்முறையாக 4000ஐ நெருங்கிய கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் பரபரப்பு

From around the web