சென்னைக்கு வந்த விமான பயணிகள் பேண்ட் பாக்கெட்டில் 36 லட்சம் மதிப்புள்ள தங்கம்: அதிர்ச்சி தகவல்

இந்த கொரோனா காலத்தில் வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்துவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தங்கத்தின் விலை தற்போது தாறுமாறாக ஏறி உள்ளதால் ஒரு கிலோ தங்கம் கடத்தி வந்தால் மிகப்பெரிய லாபம் சம்பாதிக்கலாம் என்ற நிலையில் பலர் தங்கத்தை வெளிநாடுகளில் இருந்து கடத்தி வருகின்றனர் குறிப்பாக சிறப்பு விமானங்களில் பயணம் செய்யும் பயணிகள் பலர் தங்கத்தை கடத்தி வருவதாகவும் அவர்களில் பலர் பிடிபட்டு கொண்டிருப்பதற்காகவும் செய்திகளை பார்த்து வருகிறோம் இந்த நிலையில் ரியாத்தில் இருந்து
 
சென்னைக்கு வந்த விமான பயணிகள் பேண்ட் பாக்கெட்டில் 36 லட்சம் மதிப்புள்ள தங்கம்: அதிர்ச்சி தகவல்

இந்த கொரோனா காலத்தில் வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்துவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தங்கத்தின் விலை தற்போது தாறுமாறாக ஏறி உள்ளதால் ஒரு கிலோ தங்கம் கடத்தி வந்தால் மிகப்பெரிய லாபம் சம்பாதிக்கலாம் என்ற நிலையில் பலர் தங்கத்தை வெளிநாடுகளில் இருந்து கடத்தி வருகின்றனர்

குறிப்பாக சிறப்பு விமானங்களில் பயணம் செய்யும் பயணிகள் பலர் தங்கத்தை கடத்தி வருவதாகவும் அவர்களில் பலர் பிடிபட்டு கொண்டிருப்பதற்காகவும் செய்திகளை பார்த்து வருகிறோம்

இந்த நிலையில் ரியாத்தில் இருந்து மூன்று பயணிகள் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இன்று வந்து இறங்கினர். அவர்கள் நடந்து செல்வதை பார்த்து சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களை அழைத்து சோதனை செய்தனர்

அப்போது அவர்களுடைய பேண்ட் பாக்கெட்டுகளில் 696 கிராம் தங்கம் கடத்தப்பட்டு இருந்தது தெரியவந்தது இதன் மதிப்பு மொத்தம் சுமார் 37 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று நபர்களிடம் இருந்து தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்

இந்தியாவில் மட்டுமே தான் தங்கம்பிடிபடுவதாகவும், இதே பயணிகள் வெளிநாடுகளில் விமானம் ஏறும்போது தங்கம் பிடிபடுவதில்லை என்பதும் இந்தியாவில் வந்து இறங்கும் போது மட்டுமே பிடிபடுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web