மூத்த அதிகாரி உள்பட 35 சீன ராணுவத்தினர் உயிரிழப்பா? அதிர்ச்சி தகவல்

நேற்று முன்தினம் லடாக் எல்லையில் இந்திய சீன ராணுவ வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் என்பது தெரிந்ததே. மேலும் 4 இந்திய வீரர்கள் கவலைக்கிடமாக இருப்பதாகவும் செய்திகள் வெளியானது இந்த நிலையில் இந்த மோதலில் சீன வீரர்கள் 43 பேர் உயிரிழந்ததாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்ட போதிலும் சீன அரசு அல்லது சீன ராணுவம் இதுகுறித்து எந்த விதமான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது இந்த
 

மூத்த அதிகாரி உள்பட 35 சீன ராணுவத்தினர் உயிரிழப்பா? அதிர்ச்சி தகவல்

நேற்று முன்தினம் லடாக் எல்லையில் இந்திய சீன ராணுவ வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் என்பது தெரிந்ததே. மேலும் 4 இந்திய வீரர்கள் கவலைக்கிடமாக இருப்பதாகவும் செய்திகள் வெளியானது

இந்த நிலையில் இந்த மோதலில் சீன வீரர்கள் 43 பேர் உயிரிழந்ததாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்ட போதிலும் சீன அரசு அல்லது சீன ராணுவம் இதுகுறித்து எந்த விதமான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்திய சீனா மோதலில் 35 சீன ராணுவத்தினர் உயிரிழந்ததாக அமெரிக்க உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது அதுமட்டுமின்றி உயிரிழந்த 35 பேர்களில் ஒருவர் மூத்த ராணுவ அதிகாரி என்றும் அமெரிக்க உளவுத்துறை கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இருப்பினும் சீன அரசு இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டால் மட்டுமே சீன வீரர்களின் உயிரிழப்பு குறித்த தகவல் உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web