மாஸ்க் அணியாததுற்காக 34 ஆயிரம் வழக்குகள்! ஏப்ரல் 18-ஆம் தேதி "சென்னை தவிர"!

சென்னை நீங்கலாக தமிழகம் முழுவதும் மாஸ்க் அணியாததுற்காக ஏப்ரல் 18-ஆம் தேதி 34 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் கூறப்படுகிறது!
 
மாஸ்க் அணியாததுற்காக 34 ஆயிரம் வழக்குகள்! ஏப்ரல் 18-ஆம் தேதி "சென்னை தவிர"!

மக்கள் மத்தியில் தற்போது ஆட்கொல்லி நோயாக கொரோனா காணப்படுகிறது. கடந்த ஆண்டில் இந்தியாவில் கொரோனா வர தொடங்கியது. ஆனால் இந்தியாவின் பெரும் முயற்சியால் கடந்த ஆண்டின் இறுதியில் கொரோனா நோய் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் மீண்டும் இந்தியாவில் இந்த நோய் தாக்கமானது எழுந்து பல்வேறு இன்னல்களை கொடுத்துள்ளது. மேலும் குறிப்பாக இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் இந்நோய் தாக்கமானது அதிகரித்து அங்குள்ள மக்களை மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது.

mask

டெல்லி மட்டுமின்றி இந்தியாவில் உள்ள உத்தர பிரதேசம் மகாராஷ்டிரம் ராஜஸ்தான் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் கொரோனா தாக்கமானது மீண்டும் அதிகரித்துள்ளது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  தமிழகத்தில் கொரோனா நோய்க்காக சில கட்டுப்பாட்டு விதிகள் விதிக்கப்பட்டன. அதன்படி பொது இடங்களில் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்றும் முக கவசம் அணிவது கட்டாயம் என்றும் கூறப்பட்டிருந்தது. பொதுமக்கள் அனைவரும் இதனை பின்பற்றுகின்றனர். மேலும் ஒரு சிலர் விதிகளை பெரிதான  கருதாது அலட்சியமாக செல்கின்றனர். அவர்கள் மீது வழக்குகள் பதியப்பட்டு வருகின்றன.

கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி சென்னை நீங்கலாக தமிழகம் முழுவதும் மாஸ்க் அணிய அதற்காக 34 ஆயிரம் வழக்குகள் பதியப்பட்டு உள்ளதாக காவல்துறை சார்பில் கூறப்படுகிறது. மேலும் கடந்த 8ஆம் தேதி முதல் இதுவரை மாஸ்க் அணியாதவர்கள் இருக்கும் மீது 4 லட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீது ஏப்ரல் 18ஆம் தேதி மட்டும் 867 வழக்குகளை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர். கடந்த 8ஆம் தேதி முதல் இதுவரை தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பவர் என்மீது தமிழகம் முழுவதும் 13487 வழக்கு பதிவு செய்யப்பட்டதாக காவல்துறை மூலம் தகவல் வெளியாகியுள்ளது.

From around the web