1558 வாக்குச்சாவடிகளில் 330 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை!

பதற்றமான வாக்குச்சாவடிகளின் நுழைவு வாயில்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட உள்ளது!
 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதற்காக தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் பல கட்சிகளுடன் கூட்டணி வைத்து சட்டமன்றதேர்தலை எதிர்கொள்ள உள்ளன.  தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. சட்டமன்ற தேர்தல்  தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலமான புதுச்சேரியில் நடைபெற உள்ளது. புதுச்சேரியில் மொத்தம் 30 தொகுதிகள் உள்ளன. இந்த முப்பது தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்கு பதிவானது ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது.

vote

இந்த முப்பது தொகுதிகளிலும் பல்வேறு கட்சிகள் பல கூட்டணியுடன் சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளன. அதில் அதிமுக, என் ஆர் காங்கிரஸ், பாஜக போன்ற கட்சிகள் கூட்டணி வைத்து சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ளன.  இன்று காலையில் கலால்துறை சில தகவலை வெளியிட்டது. அதன்படி இன்று இரவு 10 மணி முதல் அடுத்த 72 மணி நேரத்திற்கு மதுபான கடைகள் அனைத்தும் மூடப்படும் எனவும் கூறியது.

 தற்போது புதுச்சேரி மாநில தலைமை தேர்தல் அதிகாரி சில தகவல்களை வெளியிட்டுள்ளார். அதன்படி புதுச்சேரியில் மொத்தம் 1558 சாவடிகள் உள்ளன என்று கூறுகிறார். அதில் 330 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனவும் அவர் கூறினார். அதனால் 330 பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் வாக்குச்சாவடிகளை இணையவழியில் கண்காணிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். வாக்குத் வாக்குச்சாவடிகளில் நடைபெறும் செயல்பாடுகள் அனைத்தும் மாநில மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அலுவலகத்திலிருந்து கண்காணிக்கும் படி நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் புதுச்சேரி மாநில தேர்தல் தலைமை அதிகாரி கூறியுள்ளார்.

From around the web