புதுச்சேரியில் 30 தொகுதிகளில் 324 வேட்பாளர்கள் போட்டி!

புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளில் 324 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்!
 
புதுச்சேரியில் 30 தொகுதிகளில் 324 வேட்பாளர்கள் போட்டி!

சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் நடைபெற உள்ளது தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. இந்த 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.சட்டமன்ற தேர்தல் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலமான புதுச்சேரியில் நடைபெற உள்ளது.மேலும் புதுச்சேரியில் காங்கிரஸ், திமுக  போன்ற கட்சிகள் கூட்டணி வைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளன.

police

புதுச்சேரியில் மொத்தம் 30 தொகுதிகள் உள்ளன. இந்த 30 தொகுதிகளிலும் 324 வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.  நாளைய தினம் நடைபெற உள்ள தேர்தல் ஒரே கட்டமாக பதிவாக உள்ளது. புதுச்சேரியில் மொத்தம் 635 மையங்கள் உள்ளன. இந்த 635 மையங்களில் 1558 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த 1558 வாக்குச்சாவடிகளில் 330 வாக்குச்சாவடிகள்  பதற்றமாக காணப்படுகிறது.

புதுச்சேரியில் பாதுகாப்புக்காக 4741 காவல்துறையினர் பணியில் உள்ளனர். மேலும் 40 கம்பெனி துணை ராணுவத்தினரும் உள்ளனர். மேலும் 1000 கர்நாடக காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மொத்தம் 10 லட்சத்து 4 ஆயிரத்து 507 பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்களாக உள்ளனர்.

From around the web