32 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை: பட்ஜெட் காரணமா?

நேற்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்ததும் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்தது சர்வதேச அளவிலும் கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கம் விலை, நேற்று பட்ஜெட் காரணமாக புதிய உச்சத்தை அடைந்தது. சென்னையில் நேற்று தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.312 உயர்ந்து ரூ.31,376-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெகு விரைவில் பவுன் ரூ.32 ஆயிரத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவிலும், உள்ளூரிலும் தங்கத்தின் தேவை அதிகரித்து வருவதால்தங்கம் விலை உயர்ந்து வருவதாக
 
32 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை: பட்ஜெட் காரணமா?

நேற்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்ததும் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்தது

சர்வதேச அளவிலும் கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கம் விலை, நேற்று பட்ஜெட் காரணமாக புதிய உச்சத்தை அடைந்தது. சென்னையில் நேற்று தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.312 உயர்ந்து ரூ.31,376-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெகு விரைவில் பவுன் ரூ.32 ஆயிரத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச அளவிலும், உள்ளூரிலும் தங்கத்தின் தேவை அதிகரித்து வருவதால்தங்கம் விலை உயர்ந்து வருவதாக தங்க வியாபாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் எஸ்.சாந்தகுமார் கூறும்போது, ‘‘சர்வதேச அளவில் தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பாகக் கருதுகிறார்கள். மேலும், மத்திய பட்ஜெட்டில் ஏதாவது மாற்றம் ஏற்படலாம் என்று கருதிய பெரும்பாலான முதலீட்டாளர்கள், தங்கத்தில் முதலீடு செய்தனர். இதனால், பெரிய அளவில் தங்கம் விலை உயர்ந்து புதிய விலையை தொட்டது. இருப்பினும், இது ஒரு தற்காலிக விலை உயர்வுதான். வரும் நாட் களில் தங்கம் விலை ஏற்றமும், இறக்கமும் இருக்கும்’ என்று கூறினார்.

பங்குச்சந்தை இறக்கத்தை கண்டு வருவதால் தங்கத்தில் முதலீடு செய்வதே பாதுகாப்பானது என மக்கள் நினைத்து போட்டி போட்டு தங்கத்தை வாங்குவதால் தங்கம் விலை உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது

From around the web