வேன் விபத்து 30 பெண்கள் படுகாயம்!சிவகங்கை மருத்துவமனையில் அனுமதி!

பெரியகோட்டை அருகே சரக்கு வேன் கவிழ்ந்து அதில் பயணித்த 30 பெண்கள் படுகாயம்!
 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதற்கான முன்னேற்பாடுகளில் மும்முரமாக நடைபெற்று உள்ளது. இது மத்தியில் தேர்தல் ஆணையம் ஆனது பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.மேலும் தமிழகத்தில் பல கட்சிகள் உள்ளன. இந்த பல கட்சிகளும் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி யில் உள்ளது. மேலும் அந்த கூட்டணி கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து அந்த வேட்பாளர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

admk

அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் மீண்டும் எடப்பாடி தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் அதற்கான வேட்பு மனுவையும் தாக்கல் செய்தார். மேலும் தமிழகத்தில் மிகவும் வலிமையாக உள்ள திமுக,காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்கின்றன. மேலும் திமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார் அவர் மீண்டும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் அனைத்து பகுதிக்கும் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டுகிறார். மேலும் அவர் சிவகங்கை மாவட்டத்திலும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் அவரது பொதுக் கூட்டத்திற்கு வந்த 30 பெண்கள் படுகாயம் அடைந்ததாக தகவல் வெளியானது. மேலும் சிவகங்கை மாவட்டம் பெரியகோட்டை அருகே 30 பெண்கள் வேன் வந்ததாகவும் தகவல், அது இந்த முப்பது பெண்களும் முதல்வரின் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று திரும்பியதாகவும் தகவல் உள்ளது மேலும் அவர்கள் சிகிச்சைக்காக சிவகங்கை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

From around the web