பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால் 30 லட்ச கோடி ரூபாய் நஷ்டம்: அதிர்ச்சி தகவல்

 

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு உள்ளன என்பதும் கடந்த சில நாட்களாக ஒரு சில மாநிலங்களில் மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் கொரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால் இந்தியாவின் வருங்கால வருமானம் சுமார் 30 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும் என உலக வங்கி கணித்துள்ளது 

தெற்காசிய பிராந்தியத்தில் குறிப்பாக இந்தியாவில் பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டு உள்ளதால் 30 லட்ச கோடி ரூபாய் வருமானம் இழப்பு ஏற்படும் என்றும் ஒட்டுமொத்தமாக தெற்காசிய பிராந்தியத்தில் பார்த்தால் 65 லட்சம் கோடியைத் தாண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

தெற்காசியாவில் குறிப்பாக இந்தியாவில் வருமான இழப்பு மிக அதிகமாக இருக்கும் என்பதுடன் இந்த பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளிலும் ஜேடிபி பெரும் சரிவை சந்திக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் கொரோனா விளைவாக இந்தியா உட்பட தெற்காசிய நாடுகளில் 55 லட்சம் மாணவர்கள் கல்வி பெறும் வாய்ப்பை இழந்து உள்ளதாகவும் இவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியோடு இருக்கும் என்றும் உலக வங்கி குறிப்பிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  

From around the web