கர்நாடக மாநிலத்தில் 3 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் – சபாநாயகர்

கர்நாடக மாநிலத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலில், மூன்று சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் ரமேஷ் குமார் அறிவித்துள்ளார். 224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபையில் குமாரசாமி அரசு பெரும்பான்மையை இழந்தது. தொடர்ந்து கடந்த 23-ம் தேதி குமாரசாமி தலைமையிலான அரசு மீது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்து, ஆட்சி கவிழ்ந்தது. இந்நிலையில் ராஜினாமா கடிதம் கொடுத்த எம்.எல்.ஏ.க்கள் 15 பேரில் மூன்று பேரை தகுதி நீக்கம் செய்து கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் அறிவித்துள்ளார்.
 

கர்நாடக மாநிலத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலில், மூன்று சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் ரமேஷ் குமார் அறிவித்துள்ளார். 


224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபையில் குமாரசாமி அரசு பெரும்பான்மையை இழந்தது. தொடர்ந்து கடந்த 23-ம் தேதி குமாரசாமி தலைமையிலான அரசு மீது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்து, ஆட்சி கவிழ்ந்தது. 

கர்நாடக மாநிலத்தில் 3 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் – சபாநாயகர்


இந்நிலையில் ராஜினாமா கடிதம் கொடுத்த எம்.எல்.ஏ.க்கள் 15 பேரில் மூன்று பேரை தகுதி நீக்கம் செய்து கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் அறிவித்துள்ளார். 

பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ரமேஷ் ஜர்க்கிஹோலி, மகேஷ் கும்தஹள்ளி மற்றும் சுயட்சை எம்எல்ஏ சங்கர் ஆகியோர் அவர்களின் பதவிக்காலம் முடியும் வரை தகுதி நீக்கம் செய்யப்படுகின்றனர். இந்த 3 எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவும் அவர்களின் சுய விருப்பத்தின் பேரில் எடுக்கப்பட்டதல்ல என தெரிய வந்தது.

தற்போது மூன்று எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருப்பதால், கர்நாடக சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 224ல் இருந்து 221 ஆக குறைந்துள்ளது. அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 12 பேரின் நிலை குறித்து சபாநாயகர் இன்னும் முடிவு எடுக்கவில்லை.

From around the web