ஆழ்துளை கிணற்றில் விழுந்த ஹரியானா சிறுமி பரிதாப மரணம்

ஹரியானா மாநிலத்தில் ஷிவானி என்ற 5 வயது சிறுமி நேற்று மாலை 3 மணி அளவில் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தபோது பக்கத்து வீட்டுக்காரர் தோண்டி பல மாதங்களாக மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணறு ஒன்றில் தவறி கீழே விழுந்தார். இதனையடுத்து மீட்புப்படையினர் இரவு முழுவதும் ஆழ்துளை அருகே ஒரு பள்ளம் தோண்டி இன்று அதிகாலை அந்த சிறுமியை உயிருடன் மீட்டனர், இருப்பினும் பலமணி நேரம் சுவாசித்திற்காக ஆக்சிஜன் கிடைக்காமல் இருந்த ஷிவானி ஆபத்தான நிலையில் இருந்தார்.
 

ஆழ்துளை கிணற்றில் விழுந்த ஹரியானா சிறுமி பரிதாப மரணம்

ஹரியானா மாநிலத்தில் ஷிவானி என்ற 5 வயது சிறுமி நேற்று மாலை 3 மணி அளவில் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தபோது பக்கத்து வீட்டுக்காரர் தோண்டி பல மாதங்களாக மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணறு ஒன்றில் தவறி கீழே விழுந்தார்.

இதனையடுத்து மீட்புப்படையினர் இரவு முழுவதும் ஆழ்துளை அருகே ஒரு பள்ளம் தோண்டி இன்று அதிகாலை அந்த சிறுமியை உயிருடன் மீட்டனர், இருப்பினும் பலமணி நேரம் சுவாசித்திற்காக ஆக்சிஜன் கிடைக்காமல் இருந்த ஷிவானி ஆபத்தான நிலையில் இருந்தார்.

இந்த நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஷிவானிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சையின் பலனின்றி ஷிவானி பரிதாபமாக சற்றுமுன் மரணம் அடைந்தார்.

From around the web