120 அடி ஆழத்தில் விழுந்த சிறுவன்: மீண்டும் ஒரு சுர்ஜித்தா?

தமிழகத்தில் கடந்த ஆண்டு சுர்ஜித் என்ற சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்து பரிதாபமாக பலியான சம்பவம் நடந்த நிலையில் தற்போது அதே போல் தெலுங்கான மாவட்டத்தில் 120 அடி ஆழமுள்ள கிணற்றில் 3 வயது சிறுவன் ஒருவன் தவறி விழுந்ததால் அந்த சிறுவனை மீட்க, மீட்பு படையினர் போராடி வருகின்றனர் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கோவர்தன் என்பவரின் 3 வயது சிறுவன் நேற்று தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது அருகில் உள்ள உபயோகிக்கப்படாத ஆள்துளை கிணற்றில் விழுந்துவிட்டான்.
 

120 அடி ஆழத்தில் விழுந்த சிறுவன்: மீண்டும் ஒரு சுர்ஜித்தா?

தமிழகத்தில் கடந்த ஆண்டு சுர்ஜித் என்ற சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்து பரிதாபமாக பலியான சம்பவம் நடந்த நிலையில் தற்போது அதே போல் தெலுங்கான மாவட்டத்தில் 120 அடி ஆழமுள்ள கிணற்றில் 3 வயது சிறுவன் ஒருவன் தவறி விழுந்ததால் அந்த சிறுவனை மீட்க, மீட்பு படையினர் போராடி வருகின்றனர்

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கோவர்தன் என்பவரின் 3 வயது சிறுவன் நேற்று தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது அருகில் உள்ள உபயோகிக்கப்படாத ஆள்துளை கிணற்றில் விழுந்துவிட்டான். முதலில் 25 அடி ஆழத்தில் சிறுவன் சிக்கியதாகவும் இதனை அடுத்து அந்த சிறுவனை மீட்க முயற்சித்தபோது மண் சரிவு ஏற்பட்டதால் குழந்தை மேலும் ஆழத்திற்கு சென்றதாகவும் கூறப்படுகின்றது

இதனை அடுத்து உடனடியாக வந்த பேரிடர் மீட்பு குழுவினர் அந்த குழந்தையை உயிருடன் மீட்கப் போராடி வருகின்றார். முதல் கட்டமாக சிறுவன் இருந்த குழிக்குள் ஆக்ஸிஜன் செலுத்தப்படுகிறது. மேலும் பக்கவாட்டில் குழி தோண்டி அந்த குழந்தையை மீட்கும் முயற்சி நடந்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது

சுஜித் போன்ற பல சிறுவர்கள் ஆழ்துளை கிணற்றில் விழுந்த இன்னும் உபயோகப்படாத ஆழ்துளை கிணறுகள் மூடப்படாமல் இருப்பதால்தான் இந்த விபத்துக்கள் தொடர்ந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

From around the web