3 வயது குழந்தைக்கு குரோனோ: கேரளாவில் பரபரப்பு

கேரளாவில் ஏற்கனவே குரோனோ வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது தெரிந்ததே. குறிப்பாக பத்தனம்திட்டா என்ற பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் குரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதும் அவர்கள் தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று துபாயில் இருந்து கேரளாவின் திருவனந்தபுரத்திற்கு விமானத்தில் வந்த பயணிகளை பரிசோதனை செய்யப்பட்டதில் 3 வயது குழந்தைக்கு குரோனோ நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது இதனை அடுத்து அந்த குழந்தை
 
3 வயது குழந்தைக்கு குரோனோ: கேரளாவில் பரபரப்பு

கேரளாவில் ஏற்கனவே குரோனோ வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது தெரிந்ததே. குறிப்பாக பத்தனம்திட்டா என்ற பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் குரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதும் அவர்கள் தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று துபாயில் இருந்து கேரளாவின் திருவனந்தபுரத்திற்கு விமானத்தில் வந்த பயணிகளை பரிசோதனை செய்யப்பட்டதில் 3 வயது குழந்தைக்கு குரோனோ நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது இதனை அடுத்து அந்த குழந்தை தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

மேலும் அந்த குழந்தையின் பெற்றோருக்கும் குரோனோ வைரஸ் தாக்கி உள்ளதா? என்பது குறித்த சோதனைகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்தியாவில் கொரோனா வைரஸ் 40 பேர்களுக்கு தாக்கியுள்ள நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 41ஆக உயர்ந்துள்ளது.

From around the web