மத்திய அரசிடமிருந்து "3.65 லட்சம் டோஸ் கோவிஷீல்டு" தடுப்பூசிகள் சென்னை வந்தது!!

மத்திய அரசின் தொகுப்பிலிருந்து கூடுதலாக 3.65 லட்சம் டோஸ் கோவிஷீல்டு சென்னை வந்துள்ளது!
 
covishield

தற்போது இந்தியாவில் அதிகமாக கொரோனா நோய்த்தொற்றுகள் உள்ள மாநிலமாக தற்போது நம் தமிழகம் உள்ளது. அதன்படி தமிழகத்திலேயே தற்போது அதிகமான கொரோனா நோய் தொற்று கண்டறியப்படுகிறது. அதனை அடுத்து இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது கேரள மாநிலம். தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் கொரோனா  பாதிப்பானது படிப்படியாக குறைந்து மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இத்தகைய சூழலில் பல பகுதிகளில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை அதிகமாக நிலவுகிறது.vaccine

மேலும் நம் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கொரோனா தடுப்பு ஊசிகள் போடப்படும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது மத்திய அரசின் தொகுப்பில் இருந்து கூடுதலாக 3.65 லட்சம் கோவிஷீல்டு  தடுப்பூசிகள் சென்னை வந்தன. மேலும் புனேயில் இருந்து விமானம் மூலம் 3.65 லட்சம் கோவிஷீல்டு  தடுப்பூசி மருந்துகள் சென்னை விமான நிலையம் வந்தன. மேலும் தமிழகத்தில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் கூடுதலாக ஒதுக்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும் தமிழகத்துக்கு தடுப்பூசிகளை ஒதுக்க கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் 85000 தோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் வந்தன. இதனால் தற்போது கோவிஷீல்டு  மக்களுக்கு மிகவும் பயனளிப்பதாக காணப்படுகிறது. மேலும் வரும் நாட்களில் நம் தமிழகத்தில் தடுப்பூசி பற்றாக்குறை இருக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web