திருப்பூர் கொரோனா வார்டில் 3 பேர் மரணம்: ஆக்சிஜன் விநியோகத்தில் பிரச்சனையா?

 

கொரோனா வார்டில் 3 பேர் மரணம் குறித்து  சுகாதார துறை அறிக்கை கேட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

திருப்பூர் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் 3 பேர் அடுத்தடுத்து மரணம் அடைந்துள்ளனர். இந்த மரணம் குறித்து குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் வழங்கும் பணி ஒப்பந்ததாரரிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும், மின்தடையால் ஆக்சிஜன் விநியோகத்தில் தடை ஏற்பட்டதால் திருப்பூர் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் அடுத்தடுத்து மரணம் அடைந்ததாகவும், இந்த மரணம் தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருவதாகவும் வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் கொரோனா வார்டில் 3 பேர் மரணம் குறித்து  சுகாதார துறை அறிக்கை கேட்டுள்ளதாக * சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.

From around the web