காஞ்சிபுரத்தில் 3 கிலோ தங்கம் பறிமுதல்! தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி!

தமிழக சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் உள்ளன. தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன.234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் பலரும் தங்களது வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.தமிழகத்தின் அதிமுக அதனுடன் கூட்டணியாக பாஜக மற்றும் பாமக வைத்து உள்ளன.முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி மீண்டும் அறிவிக்கப்பட்டார்.எடப்பாடி தொகுதியில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்து தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்.

திமுக தரப்பில் இருந்து முதல்வர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார் கொளத்தூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்து தமிழகம் அனைத்தும் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். தேர்தல் ஆணையம் தமிழகத்தில் பல்வேறு உத்தரவுகளை தெரிவித்துள்ளது. மேலும் தேர்தல் பறக்கும் படையினர் உரிய ஆவணங்கள் இல்லாத தங்க நகைகளையும், பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.
தேர்தல் பறக்கும் படையினர் காஞ்சிபுரத்தில் சோதனை நடத்தினர். அப்போது சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அது மதுராந்தகத்தில் இருந்து காஞ்சிபுரத்துக்கு கொடுக்கப்பட்டதாகவும் தகவல். தேர்தல் பறக்கும் படையினர் அதை பறிமுதல் செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்