27வயது பெண் மருத்துவருக்கு கொரோனா தொற்று-தனியார் மருத்துவமனைக்கு சீல்?!

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் தமிழகத்தில் இதுவரை நேற்று மாலை நிலவரப்படி 911 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக உள்ள 27 வயது இளம்பெண்ணுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பிட்ட தனியார் மருத்துவமனையில் பணியாற்றிய அனைத்து மருத்துவர்கள், பணியாளர்கள் உட்பட அங்கு சிகிச்சைக்கு வந்த நோயாளிகள், அவர்களுடன் வந்த உறவினர்கள், அவர்கள் குடும்பத்தாரை பரிசோதிக்க அரசு
 

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் தமிழகத்தில் இதுவரை நேற்று மாலை நிலவரப்படி 911 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக உள்ள 27 வயது இளம்பெண்ணுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பிட்ட தனியார் மருத்துவமனையில் பணியாற்றிய அனைத்து மருத்துவர்கள், பணியாளர்கள் உட்பட அங்கு சிகிச்சைக்கு வந்த நோயாளிகள், அவர்களுடன் வந்த உறவினர்கள், அவர்கள் குடும்பத்தாரை பரிசோதிக்க அரசு முடிவெடுத்துள்ளதாகவும், விரைவில் அந்த மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

நேற்றைய தினம்(10/4/2020) மட்டும் 77 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web