11 நாட்களில் 253 பாலஸ்தீனியர்கள் கொலை! இஸ்ரேல் மீது போர்க்குற்ற விசாரணை?

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனியர்கள் 253 பேர் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது!
 
Israel

உலகமெங்கும் பல்வேறு இயக்கங்கள் பல்வேறு இனங்கள் மதங்கள் அதிகமாக காணப்படுகின்றன. மேலும் யூதர்களின் பூமியாக காணப்படுவது இஸ்ரேல் நாடு மேலும் இஸ்ரேலில் நாடாக அறிவித்தது அமெரிக்கா. அதன்பின்னர் இஸ்ரேலில் உள்ள ஜெருசலேம் இஸ்ரவேலுக்கு தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. அமெரிக்க அதிபர் நிறைவேற்றி வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இஸ்ரேல் பகுதியில் அதிகமாக போர் நடக்கும் பகுதியாக காணப்படுகிறது. அதுவும் குறிப்பாக இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே ஆக தினம்தோறும் கலவரங்களும் போர்களும் நடக்கும் . மேலும் தற்போது சில தினங்களாக இஸ்ரேல்-பாலஸ்தீனம் மத்தியில் அமைதி நிலவுவதாக கூறப்படுகிறது.war

ஆனால் அதற்கு முன்பு பல பகுதிகளில் இஸ்ரேல் பாலஸ்தீனம் மீது வெடி குண்டு தாக்குதல் வான்வழி தாக்குதல்களை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. மேலும் பாலஸ்தீனிய மக்கள் சிலரால் துன்புறுத்தப்படும் செய்திகள் வெளியாகின்றன.  தற்போது இதுகுறித்து கூட்டம் நடைபெற்று வருகிறது. இதைப்பற்றி ஐநாவின் மனித உரிமை கவுன்சிலில் தலைமை ஆணையர் மிச்சல் தகவல் அளித்துள்ளார். அதன்படி விளைவுகளை கருத்தில் கொள்ளாமல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால் என விசாரிக்க படுவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் 11 நாட்களாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் 253 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்என்றும் கூறியுள்ளனர்.

மேலும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் குறித்து சர்வதேச விசாரணை நடத்த ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறோம் என்றும் அவர் கூறினார். காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் போர் குற்றமாக கருதப் படலாம் என்றும் கூறப்படுகிறது. அதன்படி பதினொரு நாட்கள் நடந்த தாக்குதலில் பாலஸ்தீனிய மக்கள் 253 பேர் கொல்லப்பட்டனர். மேலும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காஸாவில் இதுவரை 1900 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் இஸ்ரேலில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இஸ்ரவேல் தகர்த்த கட்டிடங்கள் ராணுவ நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படவில்லை என்றும் கருத்து கூறப்படுகிறது.

மேலும் விளைவுகளை கருத்தில் கொள்ளாமல் மிகைப்படுத்தப்பட்ட தாக்குதல் நடத்தி இருந்தால் அது போர் குற்றமாக கருதப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும் ஹமாஸ் வீசிய ராக்கெட்டுகள் தொடர்பாகவும் அந்த இயக்கத்தினர் கணக்கு ஒப்புவிக்க வேண்டும் என்றும் ஆலோசனை கூறப்பட்டது. மேலும் தாக்குதல் தொடர்பாக சர்வதேச விசாரணை குழுவை அமைக்க 47 உறுப்பினர்கள் ஆலோசனை செய்து வருகின்றனர்.

From around the web