7வது நாளாக 2000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் பரபரப்பு

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த எண்ணிக்கையை சுகாதாரத்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ள நிலையில் இதுவரை இல்லாத வகையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 2516 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 64,603 ஆக உயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 7வது நாளாக இன்றும் 2000க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் சென்னையில் இன்று மட்டும் 1380 பேர்கள் கொரோனாவால்
 

7வது நாளாக 2000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் பரபரப்பு

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த எண்ணிக்கையை சுகாதாரத்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ள நிலையில் இதுவரை இல்லாத வகையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 2516 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 64,603 ஆக உயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 7வது நாளாக இன்றும் 2000க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் சென்னையில் இன்று மட்டும் 1380 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 44.205 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 39 பேர் பலியாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் மொத்தம் 833 பேர் பலியாகியுள்ளனர். மேலும் தமிழகத்தில் இன்று 1227 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 35,339 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் இன்று 25,148 பேர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது என்பதும், தமிழகத்தில் இதுவரை மொத்தம் 944,352 பேர்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

7வது நாளாக 2000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் பரபரப்பு
7வது நாளாக 2000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் பரபரப்பு

From around the web