புத்தாண்டு கொண்டாட்டம்: இளம்பெண்களிடம் அத்துமீறிய 25 பேர் கைது!

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது இளம்பெண்களிடம் அத்துமீறிய 25 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த பரபரப்பு சென்னையில் அல்ல என்பதும், பெங்களூரில் என்பதும் குறிப்பிடத்தக்கது சென்னையில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை புத்தாண்டு கொண்டாட்டம் எந்தவிதமான அசம்பாவிதங்களும் இன்றி சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் பெங்களூரில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பல பெண்களிடம் இளைஞர்கள் சிலர் அத்துமீறி நடந்து கொண்டதாக புகார் எழுந்தன இந்த புகார்களின் அடிப்படையில் வாகன சோதனை செய்த போலீசார் சந்தேகப்படும்
 
புத்தாண்டு கொண்டாட்டம்: இளம்பெண்களிடம் அத்துமீறிய 25 பேர் கைது!

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது இளம்பெண்களிடம் அத்துமீறிய 25 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த பரபரப்பு சென்னையில் அல்ல என்பதும், பெங்களூரில் என்பதும் குறிப்பிடத்தக்கது

சென்னையில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை புத்தாண்டு கொண்டாட்டம் எந்தவிதமான அசம்பாவிதங்களும் இன்றி சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் பெங்களூரில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பல பெண்களிடம் இளைஞர்கள் சிலர் அத்துமீறி நடந்து கொண்டதாக புகார் எழுந்தன

இந்த புகார்களின் அடிப்படையில் வாகன சோதனை செய்த போலீசார் சந்தேகப்படும் வகையில் இந்த 25 இளைஞர்களை கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

புத்தாண்டு கொண்டாட்டத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, பெண்களிடம் அத்துமீறுவது ஆகிய குற்றங்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் எச்சரித்து இருந்தும் பெங்களூரின் பல பகுதிகளில் பெண்களிடம் சில அத்துமீறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

From around the web