ஊரடங்கிலும் கொள்ளையா! 2.5 டன் ரேஷன் அரிசி, 13 கிலோ குட்கா சிக்கியது!!

சென்னையில்  வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது 2.5 டன் ரேஷன் அரிசி சிக்கியது!
 
ration products

தற்போது நம் தமிழகத்தில் ஊரடங்கு காலகட்டம் உள்ளது. இதனால் பல பகுதிகளில் ஊரடங்கு மிகவும் கட்டுப்பாட்டுடனும் கடுமையாகவும் காணப்படுகிறது. மேலும் இந்த ஒரு வாரம் மட்டும் தமிழகத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள் அனைத்தும் வங்கி நிறுவனங்கள் காப்பீட்டு நிறுவனங்கள் போன்றவையும் தங்கள் வீடுகளிலிருந்து பணியாற்ற தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் பெரும்பாலான தொழிற்சாலைகள் தனியார் நிறுவனங்கள் அனைத்தும் தற்போது வரை மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த ஊரடங்கு காலகட்டத்தில் அவ்வப்போது தன்னார்வலர்கள் தங்களால் இயன்றதை உணவின்றி தவிக்கும் தெருவிலிருக்கும் விலங்குகளுக்கும் கொடுத்து வருகின்றனர்.kaithu

மேலும் அவர்களுக்கு உதவி பண்ண தமிழக அரசிற்கு நேற்றையதினம் ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதன்படி தெரு விலங்குகளுக்கு உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும் என்றும் அதனை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் கூறியிருந்தது. இந்நிலையில் இத்தகைய காலகட்டத்தில் அனைவரும் ரேஷன் கடையை நாடுகின்றனர். இதனால் தமிழக அரசும் அவர்களுக்கு நிவாரணப் பொருட்களையும் வழங்குகின்றன. இத்தகைய சூழலிலும் ரேஷன் பொருட்கள் போன்றவை கொள்ளையடிப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.

 சென்னை கொடுங்கையூர் போலீஸ் நடத்திய வாகன தணிக்கையின் போது 2.5 டன் ரேஷன் அரிசி சிக்கியதாக கூறப்படுகிறது. மேலும் வேனில் ரேஷன் அரிசியை கடத்தி வந்த தண்டையார்பேட்டை சேர்ந்த மகேஷ் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து சென்னை எம்ஜிஆர் நகரில் இரு சக்கர வாகனத்தில் கடத்திவரப்பட்ட 13 கிலோ குட்கா பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த பொருட்களை கடத்தி வந்த சந்திரசேகர் மற்றும் தனசேகர் ஆகியோரையும் காவல்துறையினர் கைது செய்ததாக கூறப்படுகிறது ஊரடங்கு காலகட்டத்திலும் இது போன்ற சம்பவங்கள் மக்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தோடு மட்டுமின்றி பல்வேறு கொடுமையான செயலாக  காணப்படுகிறது.

From around the web