ரூ.2.5 லட்சம் வெங்காயத்தை திருடியவர்கள் கைது: பரபரப்பு தகவல் 

 

வெங்காயம் விலை தங்கத்தின் விலை போல் நாளுக்கு நாள் மின்னல் வேகத்தில் ஏறி கொண்டிருப்பது ஏழை எளிய நடுத்தர வர்க்கத்தினர்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது 

ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாய் வரை விற்பனை ஆகி வருவதால் மக்கள் வெங்காயத்தை வாங்குவதற்கு பெரும் சிரமம் அடைந்துள்ளனர். வெளிநாட்டிலிருந்து வெங்காயம் வந்தாலும் அந்த வெங்காயம் ருசியாக இல்லை என்றும் நாட்டு வெங்காயம் தான் ருசியாக இருப்பதாகவும் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் எனவே வெளிநாட்டு வெங்காயம் எதிர்பார்த்த அளவில் மக்களைப் போய் சேரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் வெங்காயத்தை தங்கத்தை பாதுகாப்பது போல் பாதுகாப்பாக கடைக்காரர்கள் வைத்திருக்கும் நிலையில் புனேயில் 2.5 லட்சம் மதிப்புள்ள 58 வெங்காய மூட்டைகளை திருடிய 4 பேர் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்

ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள 58 வெங்காய மூட்டைகளை அந்த கும்பல் திருடியதாகவும், ஆனால் அவர்களிடம் இருந்து 49 வெங்காய மூட்டைகள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள மூட்டைகளை விற்பனை செய்து விட்டதாக திருடர்கள் ஒப்புக்கொண்டதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது 

ஒரு கிலோ வெங்காயம் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்துக்கொண்டிருக்கும் நிலையில் 58 வெங்காய மூட்டைகளை திருடிய கும்பலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது  

From around the web