நாளை திருப்பூரில் 25 கார் ஆம்புலன்ஸ் சேவை! மேலும் 10,000 முன்களப்பணியாளர்கள் நியமனம்!

தமிழகத்தில் தற்போது முன் களப்பணியாளர்கள் மேலும் 10 ஆயிரம் பேர் பணியில் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது!
 
ambulance

தற்போது நம் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியை நிகழ்கிறது என்றே கூறலாம். அதன்படி தற்போது தமிழகத்தில் முதல்வராக உள்ளார் திமுக கட்சி தலைவரான மு க ஸ்டாலின். அவர்தான் தேர்தலில் கூறிய அத்துணை வாக்குறுதிகளையும் தற்போது ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். இதனால் மக்கள் மனதில் நல்லதொரு இடத்தினை அவர் தனது ஆட்சியின் ஆரம்ப முதலே தக்க வைத்து வருகிறார் என்றே கூறலாம். மக்களுக்கு உதவி பண்ண அவருடன் சேர்த்து 34 அமைச்சர்கள் நீக்கப்பட்டனர். அவர்களில் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் மக்கள் மனதில் அதிகமாக பேசப்படும் அமைச்சராக காணப்படுகிறார் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன்.subramanian

மேலும் அவர் தற்போது சில முக்கிய அறிவிப்புகளை பேட்டியளித்துள்ளார். அதன்படி தமிழகத்தில் புதிதாக 10,000 முன் களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார். மேலும் அவர் பல்லடம் அரசு கலைக் கல்லூரியில் அமைந்த கொரோனா சிகிச்சை மையத்தை ஆய்வு செய்த பின் பேட்டியளித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மருத்துவர்கள்  செவிலியர்கள் உட்பட முன் களப்பணியாளர்களை நியமித்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

மேலும் அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.மேலும் திருப்பூரில் 25 கார் ஆம்புலன்ஸ் வாகன சேவையை நாளைய தினம் நம் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

From around the web