24 வயது கோவில் ஊழியர் திடீரென கோடீஸ்வரரான அதிசயம்!

 

கேரளாவில் கோவில் ஊழியராக ஒரு சில ஆயிரங்களுக்கு மட்டும் பணிபுரிந்து கொண்டிருந்த 24 வயது இளைஞர் ஒருவர் திடீரென கோடீஸ்வரர் ஆகியுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தை அளித்துள்ளது 
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக லாட்டரி சீட்டுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தாலும் அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரி சீட்டு விற்பனை ஜரூராக நடைபெற்று வருகிறது 

இந்த நிலையில் கேரள அரசின் திருவோணம் சிறப்பு லாட்டரி குலுக்கல் சமீபத்தில் நடந்தது. ரூபாய் 12 கோடி முதல் பரிசான இந்த பரிசு 24 வயது இளைஞர் அனந்து விஜயன் என்பவருக்கு கிடைத்துள்ளது. இவர் கோவில் ஊழியராக மாதம் ஒரு சில ஆயிரங்களுக்கு மட்டுமே பணி புரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

ரூபாய் 12 கோடி பரிசு இவருக்கு விழுந்தாலும் ஏஜென்ஸி கமிஷன் மற்றும் வருமான வரி போக சுமார் 8 கோடி கிடைக்கும் என்றும் லாட்டரி சீட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திடீரென கோடீஸ்வரர் ஆகியுள்ள அனந்து விஜயனை அந்த பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர் 

கோடீஸ்வரராக மாறினாலும் தொடர்ந்து கோவில் ஊழியராக பணி புரிவேன் என்றும் தன்னால் முடிந்த அளவுக்கு ஏழை எளியவர்களுக்கும் உற்றார் உறவினருக்கும் உதவி செய்வேன் என்றும் அனந்து விஜயன் கூறியுள்ளார்

From around the web