இரண்டரை மணி நேரத்தில் 240 கிமீ: எக்ஸ்பிரஸ் சாலை அமைக்க திட்டம்

 

இரண்டரை மணி நேரத்தில் 240 கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்யும் வகையில் எக்ஸ்பிரஸ் சாலை அமைக்க ரூபாய் 13,000 கோடி மதிப்பில் திட்டமிடப்பட்டுள்ளது.

டெல்லியில் முதல் டேராடூன் வரையிலான 240 கிலோ மீட்டர் தொலைவை தற்போது பயணிக்க கிட்டதட்ட 4 மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. இந்த நிலையில் இந்த தூரத்தை இரண்டரை மணி நேரத்தில் கடக்கும் வகையில் எக்ஸ்பிரஸ் சாலை ஒன்றை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது

express way1

இந்த சாலையில் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லலாம் என்றும் அதன்படி இரண்டரை மணி நேரத்தில் டெல்லியிலிருந்து டேராடூன் சென்றுவிடலாம் என்றும் கூறப்படுகிறது.

ரூபாய் 13,000 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட இருக்கும் இந்த எக்ஸ்பிரஸ் சாலை டெல்லியில் தொடங்கி டேராடூனில் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆசியாவிலேயே வனப்பகுதி வழியாக செல்லும் மிக நீளமான சாலையாக இது அமையும் என்றும் குறிப்பிட்ட பகுதிகளில் 12 கிலோ மீட்டர் நீளத்துக்கு மேம்பால அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் வனவிலங்குகள் நடமாட்டம் தடைபடுவதோடு விலங்குகள் வாகனத்தில் அடிபட்டு இறப்பதும் தவிர்க்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

From around the web