கொரோனா பாதித்த 236 பேரை காணவில்லை: போலீசில் புகார் அளித்த கலெக்டர்

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு மேலாக 6 கட்டங்களாக ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது தற்போது நாடு முழுவதும் 6ஆம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் இந்த ஊரடங்கு இன்னும் ஒரு வாரத்தில் முடிவடைய உள்ளதால் இனிமேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்.
 

கொரோனா பாதித்த 236 பேரை காணவில்லை: போலீசில் புகார் அளித்த கலெக்டர்

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு மேலாக 6 கட்டங்களாக ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

தற்போது நாடு முழுவதும் 6ஆம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் இந்த ஊரடங்கு இன்னும் ஒரு வாரத்தில் முடிவடைய உள்ளதால் இனிமேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். கடந்த நான்கு மாதங்களாக வேலையின்றி வருமானமின்றி ஏழை எளிய மக்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் தவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கொரோனா பாதித்தவர்கள் மனதளவிலும் மிகுந்த அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர் என்பதும், கொரோனா வார்டில் இருந்து அடிக்கடி திடீர் திடீரென கொரோனா நோயாளிகள் காணாமல் போவதுமான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து கொரோனா நோயாளிகளுக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகின்றன

இந்நிலையில் திருப்பதியில் கொரோனா நோயாளிகள் 2300 பேர்களில் 236 பேர்கள் திடீரென காணவில்லை என்ற தகவல் வந்துள்ளது. இது குறித்து சித்தூர் கலெக்டர் காவல்துறையில் புகார் அளித்துள்ளதாகவும் காவல்துறையினர் காணாமல் போன 236 பேர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது

காணாமல் போன கொரோனா நோயாளிகளால் கொரோனா வைரஸ் பொது மக்களுக்கு அதிகமாக பரவும் அபாயம் இருப்பதால் விரைவில் அவர்கள் கண்டுபிடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்

From around the web