தமிழகத்தில் 231.63 கோடி பறிமுதல்! தேர்தல் பறக்கும் படை அதிரடி!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிய நிலையில் அதற்காக தமிழகத்தில் பல ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆட்சியில் உள்ள அதிமுக-பாஜக கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. மேலும் எதிர்க்கட்சியாக உள்ள திமுக கட்சி கூட்டணி ஆக காங்கிரஸ் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் வைத்துள்ளது.

தமிழகத்தில் எந்த ஒரு கூட்டணி இன்றி வெற்றி 234 தொகுதிகளிலும் தனது கட்சி வேட்பாளர்களை அறிவித்து உள்ளது நாம் தமிழர் கட்சி.அந்தக் கட்சியின் 117 ஆண் வேட்பாளர்களும் 117 பெண் வேட்பாளர்களும் உள்ளனர். தேர்தல் ஆணையம் ஆனது பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.மேலும் தேர்தல் பறக்கும் படையினர் உரிய ஆவணங்கள் இன் கொண்டு செல்லப்படும் தங்க நகைகளையும் பணத்தையும் பறிமுதல் செய்து வருகின்றனர்.
மேலும் தேர்தல் பறக்கும் படையினர் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வாகன பரிசோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தற்போது தமிழகத்தில் இதுவரை தேர்தல் பறக்கும் படையினர் 231.63 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தேர்தல் நடக்க சில நாட்களே உள்ளதால் ஆங்காங்கே கொண்டுசெல்லப்படும் பணப்பட்டுவாடாக்களை தேர்தல் பறக்கும் படையினர் மிகவும் கவனத்துடன் பிடித்து விசாரணை செய்து பறிமுதல் செய்கின்றனர்.