23 மணி நேரம் பயணம்: சசிகலாவை பத்திரமாக அழைத்து வந்த டிரைவர் இவர்தான்

 

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த மாதம் 27ஆம் தேதி விடுதலை ஆன நிலையில் நேற்று அவர் பெங்களூரில் இருந்து சென்னை கிளம்பி வந்தார்

இன்று அதிகாலை அவர் சென்னை வந்தடைந்ததும் ராமாவரம் தோட்டத்தில் உள்ள எம்ஜிஆர் இல்லத்திற்கு சென்று அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். அதன் பின்னர் அவர் இன்று காலை திநகரில் உள்ள இளவரசியின் மகள் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார். அங்குதான் அவர் சில நாட்கள் ஓய்வு எடுப்பார் என்று கூறப்படுகிறது 

car driver

இந்த நிலையில் சசிகலாவை பெங்களூரில் இருந்து 23 மணி நேரம் பயணம் செய்து காரில் அழைத்து வந்த டிரைவர் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அவரது பெயர் பிரபு என்றும் அவர் பெங்களூரில் இருந்து கார் மாறி மாறி சசிகலாவை பத்திரமாக சென்னை வரை 23 மணி நேரம் பயணம் செய்து அழைத்து வந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது

மேலும் இவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக 25 ஆண்டுகள் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னரும் சசிகலாவுக்கு கார் டிரைவராக இருந்த இவர் கடந்த 4 ஆண்டுகளாக சசிகலா சிறையில் இருந்தபோது யாருக்கும் டிரைவராக இல்லை என்பதும் தற்போது அவர் மீண்டும் சசிகலாவுக்கு டிரைவராக இருப்பதாகவும் கூறப்படுகிறது

From around the web