அதிமுக கூட்டணியில் மீதியுள்ள 9 தொகுதிகள் யாருக்கு?

 

அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவுக்கு 20 தொகுதிகளும் பாமகவுக்கு 20 தொகுதிகளும் பிரித்துக் கொடுத்தது போக 171 தொகுதிகளுக்கு நேற்று அதிமுக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது இந்த நிலையில் பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு ஒரு தொகுதியும், புரட்சி பாரதம் கட்சிக்கு ஒரு தொகுதியும், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு ஒரு தொகுதியும், மூவேந்தர் முன்னேற்ற கழகத்துக்கு ஒரு தொகுதியும், பசும்பொன் தேசிய கழகத்துக்கு ஒரு தொகுதியும் கொடுத்து விட்டதால் மொத்தம் 225 தொகுதிகள் அதிமுக கூட்டணியில் நிரம்பி விட்டன.  

எனவே அதிமுக கூட்டணியில் இன்னும் 9 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட ஒரு சில கட்சிகளுக்கு அந்த தொகுதிகளை வழங்கலாம் என தெரிகிறது.

admk

அதிமுக கூட்டணியில் இன்னும் திரு.வி.க.நகர், ஈரோடு கிழக்கு, பெரம்பலூர், பட்டுக்கோட்டை, திருச்சுழி, தூத்துக்குடி, பத்மநாபபுரம், கிள்ளியூர், தஞ்சாவூர் ஆகிய 9 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் தமாகவுக்கு 3 தொகுதிகள் கொடுத்தது போக இன்னும் 6 தொகுதிகள் யாருக்கு? என்ற கேள்வி எழுந்துள்ளது

இதுவரை அதிமுக கூட்டணியில் அரசியல் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கை பின்வருமாறு: அதிமுக - 177 தொகுதிகள், பாமக -23 தொகுதிகள், பாஜக -20 தொகுதிகள், பெருந்தலைவர் மக்கள் கட்சி - 1 தொகுதி, புரட்சி பாரதம் கட்சி - 1 தொகுதி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் - 1 தொகுதி, மூவேந்தர் முன்னேற்ற கழகம் - தொகுதி, பசும்பொன் தேசிய கழகம் - 1 தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web