60 வயது மூதாட்டியைத்தான் திருமணம் செய்வேன்: அடம்பிடித்த 22 வயது இளைஞனுக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்த போலீஸ்

60 வயது மூதாட்டியை தான் திருமணம் செய்வேன் என 22 வயது இளைஞன் அடம் பிடித்ததை அடுத்து போலீசார் அளித்த ஷாக் ட்ரீட்மென்ட்டால் அந்த இளைஞன் அதிர்ச்சியடைந்துள்ளார் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஆக்ரா என்ற பகுதியை சேர்ந்த 60 வயது மூதாட்டி ஒருவர் மீது திடீரென 22 வயது இளைஞனுக்கு காதல் ஏற்பட்டது. இதனால் அந்த மூதாட்டியின் கணவர் அதிர்ச்சி அடைந்து போலீசில் புகார் அளித்தார் இந்த புகாரை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் இருவரையும் அழைத்து
 
60 வயது மூதாட்டியைத்தான் திருமணம் செய்வேன்: அடம்பிடித்த 22 வயது இளைஞனுக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்த போலீஸ்

60 வயது மூதாட்டியை தான் திருமணம் செய்வேன் என 22 வயது இளைஞன் அடம் பிடித்ததை அடுத்து போலீசார் அளித்த ஷாக் ட்ரீட்மென்ட்டால் அந்த இளைஞன் அதிர்ச்சியடைந்துள்ளார்
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஆக்ரா என்ற பகுதியை சேர்ந்த 60 வயது மூதாட்டி ஒருவர் மீது திடீரென 22 வயது இளைஞனுக்கு காதல் ஏற்பட்டது. இதனால் அந்த மூதாட்டியின் கணவர் அதிர்ச்சி அடைந்து போலீசில் புகார் அளித்தார்

இந்த புகாரை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் இருவரையும் அழைத்து விசாரித்தனர். அப்போது இருவருமே தங்கள் காதலில் உறுதியாக இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து இருவருக்கும் தனித்தனியாக போலீசார் கவுன்சிலிங் கொடுத்தனர். அப்போது 60 வயது மூதாட்டி ஓரளவு மனம் மாறி விட்டதாக தெரிகிறது

ஆனால் 22 வயது இளைஞன் தன் காதலில் உறுதியாக இருந்ததாகவும், திருமணம் செய்தால் அந்த மூதாட்டியைத்தான் திருமணம் செய்வேன் என்று அடம் பிடித்ததை அடுத்து போலீசார் அந்த இளைஞன் மீது வேறு வழக்குகளை போட்டு வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்கும் நிலை ஏற்படும் என மிரட்டினர். போலீசாரின் இந்த ஷாக் ட்ரிட்மெண்டை அடுத்து அதிர்ச்சி அடைந்த அந்த இளைஞன் தனது காதலை கைவிட ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிகிறது

From around the web