உலக சாதனை புத்தகத்தில் 21 மாத குழந்தை: ஆச்சரிய தகவல்

 

உலக சாதனை புத்தகத்தில் ஐதராபாத்தை சேர்ந்த 21 மாத குழந்தை இடம்பெற்றிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

ஐதராபாத் நகரைச் சேர்ந்த ஒரு வயது மற்றும் ஒன்பது மாதங்கள் மட்டுமே நிறைவான ஆதித் விசுவநாதன் என்ற குழந்தை உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது

இந்த குழந்தை அபார ஞாபக சக்தி உடைய குழந்தையாக இருப்பதாகவும் பல நிறங்களின் பெயர்கள், விலங்குகளின் பெயர்கள், நாடுகளின் கொடிகள் மற்றும் பழங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் பெயர்களை உடனுக்குடன் கூறுவதோடு எலக்ட்ரானிக் சம்பந்தப்பட்ட பொருட்களின் பெயர்களையும் கூறுவதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார் 

இந்த குழந்தை ஏற்கனவே தெலுங்கு சாதனை புத்தகத்தில் இடம் பெற்றிருப்பதாகவும் இரண்டு முறை தேசிய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றிருப்பதாகவும் அவரது தாயார் கூறியுள்ளார் 
தங்களது 21 மாத குழந்தையின் அபார ஞாபக சக்தி குறித்து தாங்கள் மிகவும் பெருமைப்படுவதாகவும், தங்கள் மகனை வருங்காலத்தில் பெரிய ஆளாக்க வேண்டும் என்பதை தங்களது குறிக்கோள் என்றும் ஆதித் விஸ்வநாத்தின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்

From around the web