2019-20 ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் அம்சங்கள்!

மத்திய அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட 2019-20 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. நிதிஅமைச்சர் அருண் ஜெட்லி இல்லாத காரணத்தினால், இடைக்கால நிதி அமைச்சராக பதவியில் இருந்த பியூஸ் கோயல்தான் இந்த 2019- 2020 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். இதில் மக்களால் பெரிதளவில் எதிர்பார்க்கப்பட்ட இடைக்கால பட்ஜெட் திட்டங்களைப் பற்றிப் பார்க்கலாம்… 1. நபரின் ஆண்டு வருமானம் ரூ. 6.5 லட்சத்திற்குக் கீழ் உள்ளவர்கள், ரூ. 1.5 லட்சம் வரை
 
2019-20 ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் அம்சங்கள்!

மத்திய அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட 2019-20 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. நிதிஅமைச்சர் அருண் ஜெட்லி இல்லாத காரணத்தினால், இடைக்கால நிதி அமைச்சராக பதவியில் இருந்த பியூஸ் கோயல்தான் இந்த 2019- 2020 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். இதில் மக்களால் பெரிதளவில் எதிர்பார்க்கப்பட்ட இடைக்கால பட்ஜெட் திட்டங்களைப் பற்றிப் பார்க்கலாம்…


1. நபரின் ஆண்டு வருமானம் ரூ. 6.5 லட்சத்திற்குக் கீழ் உள்ளவர்கள், ரூ. 1.5 லட்சம் வரை சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்யும்போது வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

2. பி.எப் பயனாளிகளுக்கு உயிரிழப்பு ஏற்பட்டால் நிவாரண நிதி ரூ. 6 லட்சம் வழங்கப்படும்.

3. வீட்டு வாடகை கழிவுக்கான உச்ச வரம்பு ரூ. 2.40 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது முன்பு ரூ. 1.80 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

2019-20 ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் அம்சங்கள்!

4.  பொதுவாக வீடு வாங்கினால் வருமான வரியில் சலுகை வழங்கப்படும், இவ்வளவு காலம் 1 வீட்டிற்கு மட்டுமே வரிச்சலுகை என்பதை மாற்றி,. 2வது வீடு வாங்குபவர்களுக்கும் வருமான வரியில் சலுகை வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

5. வங்கி வட்டிக் கணக்கில் இருந்து வருமானத்துக்கு தனியாக 50 ஆயிரம் ரூபாய் வரை வருமான வரிச் சலுகை அளிக்கப்படும்.

6. பிரதமரின் கிசான் யோஜனா திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு ஓர் ஆண்டுக்கு ரூ.6000 கொடுக்கப்படும்.

7. வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

8. கட்டிட வேலை, கை வேலை எனப் பலதரப்பட்ட வேலைகள் செய்யும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாத ஓய்வூதியமாக ரூ.3000 வழங்கப்படும்.

From around the web