தமிழக பட்ஜெட் 2018-2019: முக்கிய அம்சங்கள்

தமிழக நிதியமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் இன்று தமிழக பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் கைத்தறி உதவி திட்டத்திற்கு ரூ.40 கோடி ஒதுக்கீடு மானிய விலை இருசக்கர வாகனத் திட்டத்திற்கு ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பெயரிலான மகப்பேறு உதவித் தொகை திட்டத்திற்கு ரூ.959.21 கோடி மீனம்பாக்கம் – கிளாம்பாக்கம் (வண்டலூர்) இடையே மெட்ரோ ரயில் இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. பல்வேறு திருமண
 


தமிழக பட்ஜெட் 2018-2019: முக்கிய அம்சங்கள்

தமிழக நிதியமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் இன்று தமிழக பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்

கைத்தறி உதவி திட்டத்திற்கு ரூ.40 கோடி ஒதுக்கீடு

மானிய விலை இருசக்கர வாகனத் திட்டத்திற்கு ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பெயரிலான மகப்பேறு உதவித் தொகை திட்டத்திற்கு ரூ.959.21 கோடி

மீனம்பாக்கம் – கிளாம்பாக்கம் (வண்டலூர்) இடையே மெட்ரோ ரயில் இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.

பல்வேறு திருமண நிதியுதவி திட்டங்களுக்காக 726.32கோடி ஒதுக்கீடு

முதலீடுகளுக்கு 2500 கோடி ரூபாய் நிதி உதவி வழங்க இலக்கு. கடந்த ஆண்டைக் காட்டிலும் 500 கோடி அதிகம்.

5000 ஒருங்கிணைந்த பண்ணை அலகுகள் அமைக்க 101.62 கோடி ரூபாய்

சாகுபடிக்குப் பயன்படாத, சமுதாய மற்றும் பட்டா நிலங்களில் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தித் திட்டம் செயல்படுத்தப்படும்.

ரூ. 1125 கோடி செலவில் தேனி, சேலம் ஈரோடு மாவட்டங்களில் 250 மெ.வா. திறன் கொண்ட மிதக்கும் சூரிய மின்சக்தி உற்பத்தித் திட்டம்

மாணவ மாணவிகளுக்கு பேருந்து பயணச் சீட்டு வழங்க ரூ. 766 கோடி. பெட்ரோல் மானியத்துக்கு 250 கோடி. போக்குவரத்துத் துறைக்கு 1297.83 கோடி

சென்னை தவிர்த்து இதர நகரங்களில் வீட்டு வசதியை உருவாக்க 5000 கோடி மதிப்பில் ஆசிய வங்கியில் கடன் கோரப்பட்டுள்ளது

சமூகப் பாதுகாப்பு உதவித்தொகை ரூ.3,958 கோடி

மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியத்துக்கு ரூ.100 கோடி

மின்சாரத் துறைக்கு ரூ.18,560.77 கோடி. ரூ.2350 கோடி செலவில் 500 மெ.வா சூரிய மின்சக்தி திட்டம்.

முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு கல்விச் செலவை திரும்ப வழங்கும் திட்டத்துக்கு 460.25 கோடி ரூபாய் ஒதுக்கீடு

2019-20ஆம் ஆண்டில் அரசின் வருவாய் ரூ.1,97,117 கோடியாக இருக்கும்.

சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான வர்த்தக மற்றும் முதலீட்டு மையம் அமைக்கப்படும்.

வெள்ளப்ப்பளம், தரங்கம்பாடி, திருவொற்றியூர் குப்பத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்க ரூ.420 கோடி

ரூ.10,000 கோடி பயிர்கடன் வழங்க திட்டம்

பழங்கள் மற்றும் காய்கறிகள் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.50 கோடி

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஸ்ரீதர் குழு அறிக்கை , சித்திக் குழு அறிக்கை பரிசீலனையில் உள்ளது

ஆழ்கடல் மீனவர்களின் தொலைத் தொடர்பு வசதிக்காக 18 உயர்மட்ட மின்கோபுரங்கள் அமைக்கப்படும் ; 80 ஆழ்கடல் மீன்பிடி குழுக்களுக்கு நவீன தொடர்பு கருவிகள் வழங்கப்படும்

10 குதிரைத்திறன் கொண்ட சூரிய சக்தியில் இயங்கும் 2000 பம்புசெட்டுகள் 90 சதவீத மானியத்துடன் வழங்கப்படும்

2019-20இல் நெல் கொள்முதல் ஊக்கத்தொகைக்காக ரூ.180 கோடி ஒதுக்கீடு

சாதாரண நெல் கொள்முதல் குவிண்டாலுக்கு ரூ.1,800, சன்ன ரக நெல்லுக்கு ரூ.1,830 வழங்கப்படும்

அரசு தனியார் உதவியுடன் 5 மாவட்டங்களில் ஆண்டுக்கு 10 ஆயிரம் பொறியில் மாணவர்களுக்கு உயர்நிலை தொழில்நுட்பப் பயிற்சி. திறன் மேம்பாட்டுக் கழகத்துக்கு ரூ.200 கோடி.

சென்னை மெட்ரோ திட்ட 2ஆம் கட்டத்தில் 118.90 கி.மீ. தொலைவுக்கு 2 மெட்ரோ வழித்தடங்கள். மெட்ரோ சேவை 172.91 கி.மீ. தொலைவாக அதிகரிக்கும்.

ரூ. 20,196 கோடி வழங்க ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை ஒப்புதல்

From around the web