2000 ரூபாய் நோட்டு அச்சடிப்பு நிறுத்தம்: மீண்டும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையா?

கடந்த 2016ஆம் ஆண்டு மத்திய அரசு ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற அறிவிப்பை வெளியிட்டு ஒட்டுமொத்த இந்திய மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதற்கு பதிலாக பணப்பற்றாக்குறையை சரிகட்ட புதியதாக ரூ.2000 நோட்டு அச்சடிக்கப்பட்டு மக்களின் புழக்கத்திற்கு வெளியானது. ஆனால் இந்த 2,000 ரூபாய் நோட்டுக்களால் வரி ஏய்ப்பு உள்பட பல்வேறு குற்றச்செயல்கள் அதிகமாகி வருவதாக புகார்கள் குவிந்தது. இதனையடுத்து ரூ.2000 நோட்டுக்களை அச்சடிக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தகவலை மத்திய அரசோ, ரிசர்வ் வங்கியோ
 


2000 ரூபாய் நோட்டு அச்சடிப்பு நிறுத்தம்: மீண்டும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையா?

கடந்த 2016ஆம் ஆண்டு மத்திய அரசு ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற அறிவிப்பை வெளியிட்டு ஒட்டுமொத்த இந்திய மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதற்கு பதிலாக பணப்பற்றாக்குறையை சரிகட்ட புதியதாக ரூ.2000 நோட்டு அச்சடிக்கப்பட்டு மக்களின் புழக்கத்திற்கு வெளியானது.

ஆனால் இந்த 2,000 ரூபாய் நோட்டுக்களால் வரி ஏய்ப்பு உள்பட பல்வேறு குற்றச்செயல்கள் அதிகமாகி வருவதாக புகார்கள் குவிந்தது. இதனையடுத்து ரூ.2000 நோட்டுக்களை அச்சடிக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தகவலை மத்திய அரசோ, ரிசர்வ் வங்கியோ உறுதி செய்யவில்லை.

ரூ.200 நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு எந்த நேரத்திலும் வரலாம் என எதிர்க்கட்சி தலைவர்கள் அவ்வப்போது கூறி வரும் நிலையில் திடீரென ரூ.2000 நோட்டு அச்சடிக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள தகவலால் மீண்டும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை வருமோ? என்ற அச்சம் ஒவ்வொருவரின் மனதிலும் உள்ளது. இருப்பினும் இப்போதைக்கு பணமதிப்பிழப்பு நடவடிக்கை இருக்காது என்றே ரிசர்வ் வங்கியின் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது


From around the web