ஒரு ரூ.2,000 நோட்டு கூட அச்சடிக்கப்படவில்லை: ரிசர்வ் வங்கியின் அதிர்ச்சி தகவல்

கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்து அதற்கு பதிலாக ரூ.500 மற்றும் ரூ.2000 புதிய நோட்டுக்களை அச்சடித்து பொதுமக்களின் புழக்கத்திற்கு விடப்பட்டது இந்த நிலையில் கருப்புப்பண முதலைகள் ரூ.2000 நோட்டை அதிகமாக பதுக்குவதாக வெளிவந்த தகவலை அடுத்து ரூ.2000 நோட்டு அச்சடிப்பது நிறுத்தபட்டதாக கூறப்பட்டது இந்த நிலையில் 2019-20ஆம் நிதியாண்டில் ஒரு ரூ.2,000 நோட்டு கூட அச்சடிக்கப்படவில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது
 

ஒரு ரூ.2,000 நோட்டு கூட அச்சடிக்கப்படவில்லை: ரிசர்வ் வங்கியின் அதிர்ச்சி தகவல்

கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்து அதற்கு பதிலாக ரூ.500 மற்றும் ரூ.2000 புதிய நோட்டுக்களை அச்சடித்து பொதுமக்களின் புழக்கத்திற்கு விடப்பட்டது

இந்த நிலையில் கருப்புப்பண முதலைகள் ரூ.2000 நோட்டை அதிகமாக பதுக்குவதாக வெளிவந்த தகவலை அடுத்து ரூ.2000 நோட்டு அச்சடிப்பது நிறுத்தபட்டதாக கூறப்பட்டது

இந்த நிலையில் 2019-20ஆம் நிதியாண்டில் ஒரு ரூ.2,000 நோட்டு கூட அச்சடிக்கப்படவில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது

ரூ.2,000 நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் ரிசர்வ் வங்கி தற்போது இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web