2000 கிராமங்கள் 3970 நகர்ப்புற தெருக்கள் கொரோனா பாதிப்பு உச்சம்!

 கொரோனா பரவலால் தமிழகத்தில் 512 இடங்கள் தனிமைப்படுத்தி உள்ளன சுகாதாரத்துறை செயலாளர் கூறியுள்ளார்!
 

தமிழகத்தில் சில தினங்களாக கொரோனா பாதிப்பானது அதிகரித்து உள்ளது. மேலும் தமிழகத்தின் தலைநகரமாக உள்ள சென்னையிலும் கொரோனா பாதிப்பானது தலைவிரித்தாடியது. மேலும் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பானது மிகவும் அதிகரித்து உள்ளது.  இதனால் மக்கள் மிகவும் வேதனை உள்ளனர். மேலும் தமிழகத்தில் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த கொரோனா பாதிப்பு இருப்பது மக்களுக்கு மிகுந்த வேதனையை அளித்துள்ளது.

corona

தமிழகத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தற்போதைய தகவல்களை கூறியுள்ளார். மேலும் அவர் 2 ஆயிரத்தை தாண்டிய பிறகு கொரோனா பாதிப்பு குறையும் எனவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் இதுவரை 25. 36 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் ரெம்டெசிவீர் உள்ளிட்ட மருந்துகள் போதுமான அளவில் உள்ளதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

மேலும் தேர்தலில் வாக்களிக்க செல்வோர் கடைசியாக செல்வது தவிர்த்து முன்கூட்டியே பயணம் செல்வது நல்லது எனவும் அவர் கூறினார். பேருந்து நிலையங்களில் பயணிகளின் உடல் பரிசோதனை தொடர்ந்து பரிசோதிப்பது மிகவும் அவசியம் எனவும் சுகாதாரத்துறை செயலாளர் கூறியுள்ளார். தமிழகத்தில் 512 இடங்களில் கொரோனா தனிமைப்படுத்தி உள்ளதாகும் அவர் கூறினார். மேலும் கிராமங்களில் 2000 மேற்பட்ட குடியிருப்புகளிலும் நகரங்களில் 3970 மேற்பட்ட தெருக்களிலும் பாதிப்பு உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

From around the web