முக கவசம் அணியாவிட்டால் 200 ரூபாய் !எச்சில் துப்பினால் 500 ரூபாய் அபராதம்!

சென்னையில் கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளார் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்!
 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல்  சில தினங்கள் முன்பு நடைபெற்றது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மேலும் வாக்காளர்கள் அனைவரும் சமூக இடைவெளி கடைபிடித்து ஜனநாயக கடமை ஆற்றினார். தமிழகத்தில் சில வாரங்களாக கொரோனா தாக்கம் தலைவிரித்தாடுகிறது. குறிப்பாக தமிழகத்தில் உள்ள சென்னையில் கொரோனாவின் தாக்கமானது படிப்படியாக உயர்ந்து வருகிறது. இதனால் சென்னையில் வாழும் மக்கள் மிகவும் சோகத்தில் உள்ளனர்.

corona

மேலும் தமிழக அரசு நேற்றைய தினம் சில கட்டுப்பாட்டு விதிகள் மற்றும் தடைகளையும்  வெளியிட்டுள்ளது.சென்னை போக்குவரத்து கழகம் சென்னையில் கூடுதலாக 400 அரசு பேருந்துகள் இயக்கப்படும் என்ற தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் கூட்ட நெரிசலில் காரணமாக கொரோனா நோய் பரவலாம் என்பதால் கூடுதலாக பேருந்துகளில் இயக்க உள்ளதாகும் தகவலை வெளியிட்டுள்ளது. தொடர்ந்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அவர் தற்போது சில கட்டுப்பாடுகளையும் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

 முககவசம் அணியாவிட்டால் 200ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் அவர் கூறினார். மேலும் பொது இடங்களில் எச்சில் துப்பினால் 500 ரூபாய் அபராதமாக விதிக்கப்படும் என்றும் சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.  கொரோனா தடுப்பு விதிகளை மீறினால்கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

From around the web