20 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியா? கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்தால் காலியாக உள்ள 18 தொகுதிகள் உள்பட மொத்தம் காலியாகவுள்ள 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் வந்தால் தான் போட்டியிட தயார் என க்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். ஏற்கனவே திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய இரண்டு தொகுதி இடைத்தேர்தல் நடந்தால் அதில் போட்டி இல்லை என சமீபத்தில் கமல்ஹாசன் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கிட்டத்தட்ட ஒரு மினி சட்டமன்ற பொதுதேர்தல் போல் நடைபெறவுள்ள , 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல்
 
kamal-mnm

20 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியா? கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்தால் காலியாக உள்ள 18 தொகுதிகள் உள்பட மொத்தம் காலியாகவுள்ள 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் வந்தால் தான் போட்டியிட தயார் என க்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய இரண்டு தொகுதி இடைத்தேர்தல் நடந்தால் அதில் போட்டி இல்லை என சமீபத்தில் கமல்ஹாசன் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் கிட்டத்தட்ட ஒரு மினி சட்டமன்ற பொதுதேர்தல் போல் நடைபெறவுள்ள , 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வரும் போது மக்கள் நீதி மய்யம் தேர்தலை எதிர்கொள்ளும் என்று கூறியுள்ளார்.

மேலும் இலங்கையில் ராஜபக்சே பிரதமர் ஆனதை தான் வரவேற்கவில்லை என்றும் இருப்பினும் இலங்கை பிரதமராக பொறுப்பேற்றுள்ள ராஜபக்சே தமிழ் மக்களிடம் முன்பு போல் நடந்து கொள்ள மாட்டார் என நம்புவோம் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் அறிவிப்பை அடுத்து ரஜினியும் தனது கட்சி இடைத்தேர்தலை சந்திக்கும் என அறிவிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web