கார்கில் போரின் 20ஆம் ஆண்டு நினைவு தினம்!!!!

இந்தியா, பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் படைகளை வெற்றி கொண்டு கார்கிலில் மீண்டும் இந்திய கொடியை நாட்டிய இந்திய ராணுத்தை போற்றும் கார்கில் வெற்றி தினம் இன்று. 1999ம் ஆண்டு பாகிஸ்தானின் பிரதமராக பொறுப்பு வகித்தவர் நவாஸ் ஷெரீப். பாகிஸ்தானிய படைகள் மற்றும் பயங்கரவாதிகள் ஆகியோர் இந்திய எல்லைக்குள் நுழைந்து முக்கிய இடங்களைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. இதனைத் தொடர்ந்து, ‘ஆபரேஷன் விஜய்’ என்ற திட்டத்தை இந்திய ராணுவத்தினர் உருவாக்கினர். இதற்கிடையில் இரண்டு இந்திய
 

இந்தியா, பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் படைகளை வெற்றி கொண்டு கார்கிலில் மீண்டும் இந்திய கொடியை நாட்டிய இந்திய ராணுத்தை போற்றும் கார்கில் வெற்றி தினம் இன்று. 

1999ம் ஆண்டு பாகிஸ்தானின் பிரதமராக பொறுப்பு வகித்தவர் நவாஸ் ஷெரீப். பாகிஸ்தானிய படைகள் மற்றும் பயங்கரவாதிகள் ஆகியோர் இந்திய எல்லைக்குள் நுழைந்து முக்கிய இடங்களைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. 

கார்கில் போரின் 20ஆம் ஆண்டு நினைவு தினம்!!!!

இதனைத் தொடர்ந்து, ‘ஆபரேஷன் விஜய்’ என்ற திட்டத்தை இந்திய ராணுவத்தினர் உருவாக்கினர். இதற்கிடையில் இரண்டு இந்திய போர் விமானங்களை பாகிஸ்தான் படைகள் சுட்டு வீழ்த்தின. அதற்குள் மற்றொரு போர் விமானம் விபத்திற்குள்ளானது. இந்நிலையில் அமெரிக்காவின் உதவியை பாகிஸ்தான் நாடியது. 

ஆனால் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து படைகள் திரும்ப பெற்றால் தான், உதவி செய்ய முன்வர முடியும் என்று அப்போதைய அதிபர் பில் கிளிண்டன் கூறினார். இதன் காரணமாக, அங்கிருந்து பாகிஸ்தான் படைகள் பின்வாங்கின. இந்த சூழலில் பாகிஸ்தானின் பிற ஆக்கிரமிப்பு நிலைகளைக் குறிவைத்து, இந்திய ராணுவம் தாக்குதலைத் தொடங்கியது. 

பாகிஸ்தான் படைகளால் சமாளிக்க முடியாத அளவிற்கு, தாக்குதல் கடுமையாக இருந்தது. ஜூலை இறுதிவாக்கில் அனைத்து ஆக்கிரமிப்பு நிலைகளிலும் பாகிஸ்தான் படைகள் தோற்கடிக்கப்பட்டன. இதையடுத்து ஜூலை 26, 1999ல் இந்திய ராணுவ கார்கில் வெற்றியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அன்று முதல் இந்நாள் ’விஜய் திவாஸ்’ என்று அழைக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது. 

இந்நிலையில் கார்கில் போரின் 20ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. காஷ்மீரின் திராஸ் போர் நினைவிடத்தில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு ராணுவ வீரர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

From around the web