பாளையங்கோட்டை தொகுதியில் 20 ஆண்டுகால வளர்ச்சி பணிகள் நடைபெறவில்லை பரப்புரையில் கூறும் வேட்பாளர்!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் நெல்லை முபாரக் தேர்தல் பிரச்சாரம்!
 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதன் மத்தியில் தமிழகத்தில் பல கட்சிகள் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளனர். ஆளும் கட்சியான அதிமுக கட்சி தன்னுடன் கூட்டணியாக பாஜக கட்சியையும் மேலும் எதிர்க்கட்சியாக உள்ள திமுக கட்சி தன்னுடன் கூட்டணியாக காங்கிரஸ் கட்சியின் அமைத்துள்ளது.

ttv

இதன் மத்தியில் சட்டமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆனது தேர்தலை சந்திக்க உள்ளன. மேலும் அதன் கூட்டணியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியானது உள்ளது. முன்னதாக தேமுதிக கட்சி  அதிமுக கூட்டணியில் இருக்கும் என எதிர்பார்த்த நிலையில் கூட்டணியிலிருந்து அதன்பின்னர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் தேமுதிக மற்றும் அமமுக கட்சி கூட்டணி உறுதியானது. மேலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தேமுதிகவிற்கு 60 தொகுதி வழங்கப்பட்டுள்ளன.

தற்போது மேலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியுடன் எஸ்டிபிஐ கட்சியும் கூட்டணியாக உள்ளது. எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக நெல்லை முபாரக் பாளையங்கோட்டை தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகிறார் .அவர் தமிழகத்தின் முன்மாதிரியாக பாளையங்கோட்டை மாற்றுவேன் எனவும்  உறுதி அளித்துள்ளார். மேலும் பாளையங்கோட்டையில் 20 ஆண்டுகளாக எந்த ஒரு அரசு பணி நடைபெறவில்லை என்றும் அவர் கூறினார்.

From around the web