ஆர் கே நகரில் 20 ரூபாய் கும்பகோணத்தில் 2000 ரூபாய் மீண்டும் டெக்னிக்கை பயன்படுத்திய அமமுகவினர்!

ஆர்கேநகர் டெக்னிக்கை கும்பகோணத்தில் பயன்படுத்திய அமமுகவினர்!
 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஆனது  நடைபெற்றது. அதற்கான வேட்பாளர்களுக்கு மேலும் தமிழகத்திலுள்ள பல பகுதிகளில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.மேலும் தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. இதில் 234 தொகுதிகளிலும் தேர்தல் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்றது.மேலும்  வாக்களிக்க வந்தவர்களுக்கு பாதுகாக்கும் விதமாக அவர்களுக்கு முகக்கவசம், கையுறை போன்றவையும் வழங்கப்பட்டது. மேலும் அவர்களின் உடல்நிலை பரிசோதிக்கப்பட்டு அவர்களை வாக்களிக்க அனுமதித்தனர்.

ttv

இந்நிலையில் மறைந்த முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா போட்டியிட்ட ஆர் கே நகர் தொகுதியில் சில வருடங்களுக்கு முன்பு இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்த இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெற்றி பெற்றார். மேலும் அப்பகுதியில் 20 ரூபாய் டோக்கன் வழங்கப்பட்டதாகவும் அப்போது தகவல் வெளியானது.

மேலும் அதே டெக்னிக்கை அமமுகவினர் மீண்டும் பயன்படுத்தி உள்ளனர். ஆனால் இந்த முறை 2000 ரூபாய் டோக்கன் வழங்கப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும் வாக்களித்து வந்தவர்கள் அடுத்த நாள் பணம் பெறாமல் டோக்கன் பெயரிடப்பட்ட கடையில் மளிகை பொருட்கள் வாங்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஆர்கே நகர்  மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் நடைபெற்ற இடைத் தேர்தலிலும் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web