20 ஆக்சிசன் பொருட்கள், 75 மருத்துவ பொருட்கள்!இரண்டு விமானங்கள் 95 பொருள்கள் ரஷ்யாவுக்கு நன்றி!

ரஷ்யாவிலிருந்து மருத்துவ உபகரணங்கள் டெல்லிக்கு இரண்டு விமானங்கள் மூலம் வந்ததாக கூறப்படுகிறது!
 
20 ஆக்சிசன் பொருட்கள், 75 மருத்துவ பொருட்கள்!இரண்டு விமானங்கள் 95 பொருள்கள் ரஷ்யாவுக்கு நன்றி!

தற்போது இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் எழுந்துள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது. மேலும் தற்போது உலக அளவில் இந்தியா முதலிடத்தில் கொரோனா தாக்கத்தில் பாதிக்கப்பட்ட நாடுகளில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இதற்கு எதிராக இந்தியாவும் தொடர்ந்து போராடி வருகிறது. ஆயினும் பல பகுதிகளில் இந்நோயின் தாக்கமானது அதிகமாகவே காணப்படுகிறது. மேலும் மத்திய அரசின் சார்பில் பல்வேறு நலத் திட்டங்களும் இந்தியாவிற்கு வழங்கப்படுகின்றன.airplane

மத்திய அரசின் சார்பில் இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளுக்கு தடுப்பூசிகள் அனுப்பப்படுகின்றன. எனினும் ஒரு சில பகுதிகளில் தடுப்பூசி பற்றாக்குறையும் ஒரு சில பகுதிகளில் கொரோனா சிகிச்சை அளிக்கப்படும் போது தேவைப்படும் ஆக்சிசன் தேவையும் அதிகரித்துள்ளது. இதனால் தடுப்பூசியை தொடர்ந்து ஆக்சிசன் பற்றாக்குறையும் அதிகரித்துள்ளது. இதனால் இந்தியாவுக்கு பல நாடுகளும் உதவிக்கரம் நீட்டுகின்றன. மேலும் நேற்றைய தினம் ஆஸ்திரேலியா ஜெர்மனி துபாய் சீனா போன்ற 15 நாடுகள் இந்தியாவிற்கு உதவுவதாக கூறியிருந்தது.

மேலும் அவைகள் பலவும் இந்தியாவுக்கு உதவி வருகின்றன. இதனைத் தொடர்ந்து  தற்போது ரஷ்யா மருத்துவ பொருட்களை டெல்லிக்கு அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இரண்டு விமானங்கள் மூலம் டெல்லி கொண்டு வரப்பட்டது. அந்த விமானத்தில் சிகிச்சைக்காக தேவைப்படும் 95 பொருள் கூறப்படுகிறது. அவற்றில் 20 ஆக்சிசன் தயாரிக்கும் கருவிகள் 75 உயிர்காக்கும் கருவிகள் உள்ளன.

From around the web