இந்த ஆண்டு கூடுதலாக 20 சதவிகிதம் இடங்கள்: அரசு கலைக் கல்லூரி மாணவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம் 

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கல்லூரிகள் இன்னும் திறக்கப்படவில்லை என்றாலும் அடுத்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது

 

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கல்லூரிகள் இன்னும் திறக்கப்படவில்லை என்றாலும் அடுத்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது

முதலில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது என்பதும் அதனை அடுத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்த ஆண்டு முழுக்க முழுக்க ஆன்லைனிலேயே விண்ணப்பம் பதிவு செய்யப்படுகிறது என்பதும் சான்றிதழ்கள் பதிவேற்றப்பட்டு வருகிறது என்பதும் கவுன்சலிங் நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் பொறியியல் கல்லூரிகளை விட கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருவதால் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களின் விண்ணப்பங்கள் குவிந்தன 
\இதனை கணக்கில் கொண்டு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக 20 சதவீத மாணவர்களை சேர்க்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது

இதுகுறித்து கல்லூரி கல்வி இயக்குநர் கூறியபோது ’2020-21 ஆம் கல்வியாண்டில் மாணவர்களின் விண்ணப்பங்கள் அதிகமாக இருப்பதால் கூடுதலாக 20 சதவீத மாணவர்களை சேர்க்க ஒப்புதல் அளிக்கப் போவதாகவும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக் கழகங்களை அணுகி ஒப்புதல் பெற வேண்டும் என்றும் கல்லூரி கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்

From around the web