திருச்சி லலிதா ஜுவல்லர்ஸ் நகை கொள்ளை- 2 நாளில் கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை

திருச்சி நகரின் இதயப்பகுதி போன்றது சத்திரம் பேருந்து நிலையம். உள்ளூர் நகர பேருந்துகள் எல்லாமே இங்கு நின்றுதான் செல்லும். மக்கள் கூட்டம் பரபரப்பாக இருக்கும். இப்படியான முக்கிய இடத்தில்தான் லலிதா ஜுவல்லர்ஸ் இயங்குகிறது. பிரபல நகைக்கடையான இந்த நகைக்கடைக்கு தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கிளைகள் உள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இப்பகுதியில் பின்பகுதியில் மிகப்பெரிய ஓட்டை போட்டு கொள்ளைக்கும்பல் திருடியுள்ளது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்ட எஸ்.பி ஜியாவுல்ஹக், கமிஷனர் அமல்ராஜ் ஆகியோர்
 

திருச்சி நகரின் இதயப்பகுதி போன்றது சத்திரம் பேருந்து நிலையம். உள்ளூர் நகர பேருந்துகள் எல்லாமே இங்கு நின்றுதான் செல்லும். மக்கள் கூட்டம் பரபரப்பாக இருக்கும்.

திருச்சி லலிதா ஜுவல்லர்ஸ் நகை கொள்ளை- 2 நாளில் கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை

இப்படியான முக்கிய இடத்தில்தான் லலிதா ஜுவல்லர்ஸ் இயங்குகிறது. பிரபல நகைக்கடையான இந்த நகைக்கடைக்கு தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கிளைகள் உள்ளது.

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இப்பகுதியில் பின்பகுதியில் மிகப்பெரிய ஓட்டை போட்டு கொள்ளைக்கும்பல் திருடியுள்ளது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்ட எஸ்.பி ஜியாவுல்ஹக், கமிஷனர் அமல்ராஜ் ஆகியோர் இரண்டு நாளில் கொள்ளையர்கள் பிடிக்கப்படுவர் என உறுதியளித்துள்ளனர்.

கடையில் உள்ள பாதி நகைகளை கொள்ளையடிக்கும் அளவுக்கு மிக பொறுமையாக கொள்ளையடித்துள்ளதும், அவர்கள் முகமூடி அணிந்து வந்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இக்கொள்ளை வழக்கு தொடர்பாக ஜார்க்கண்ட்டை சேர்ந்த சிலர் புதுக்கோட்டையில் கைது செய்யப்பட்டனர் இவர்களுக்கும் இந்த கொள்ளைக்கும் சம்பந்தம் இல்லை என விசாரணையின் முடிவில் தெரிய வந்ததால் இவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இக்கொள்ளை சம்பவம் திருச்சி மாநகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web